[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பற்றாக்குறையை போக்க செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதியை உடனடியாக ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சிறப்பு விலக்கு மூலம் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிக்க வேண்டும் - பிரதமர் மோடியிடம் முதல்வர் பழனிசாமி மனு
  • BREAKING-NEWS மருத்துவர்கள், மருத்துவ துறையை சேர்ந்தவர்களை பாதுகாக்க சட்டப்பேரவையில் தனியாக சட்டம் இயற்றுக - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம்
  • BREAKING-NEWS அனைத்து இடங்களிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்; சவாலாக உள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் உதயகுமார்

வாட்சனை‘மீம்ஸ்’களால் வாழ்த்தும் சிஎஸ்கே ரசிகர்கள்

god-level-dedication-shane-watson-win-hearts-for-playing-ipl-final-with-injured-knee

நடப்பு ஐபிஎல் தொடரில் ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை பறிகொடுத்தது. சென்னை அணி எப்படியும் கோப்பையை வெல்லும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் இருந்த சென்னை ரசிகர்கள் இறுதியில் ஏமாற்றம் அடைந்தனர். 

சென்னை அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றவர் வாட்சன். இவர்  59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார். வாட்சன் அதிரடி ஆட்டம் கொடுத்த நம்பிக்கைதான் சென்னை ரசிகர்களை இறுதிவரை போட்டியைக் காண வைத்தது. ஏனென்றால், தோனி ரன் அவுட் ஆன உடனே போட்டி முடிந்துபோனதாக தான் எல்லோரும் நினைத்தார்கள். 

           

போட்டி முடிந்து ஹர்பஜன் சிங் வெளிப்படுத்திய பின்னர்தான் வாட்சன் ரத்தம் காயங்களுடன் விளையாடியது எல்லோருக்கும் தெரியவந்தது. போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த நேரத்தில் யாரும் பெரிதாக கவனிக்கவில்லை. வாட்சனும் தன்னுடைய காயத்தினை பொருட்படுத்தாமல் 20 ஓவர்களும் களத்தில் நின்று போராடினார்.

                  

ரத்த காயங்களுடன் வாட்சன் விளையாடிய படத்தை பார்த்ததும், சென்னை அணி ரசிகர்கள் பலரும் உணர்ச்சி வசப்பட்டுவிட்டார்கள். ‘வாட்சனின் இந்தப் போராட்டத்திற்காகவாவது சென்னை அணி வெற்றி பெற்றிருக்கலாம்’ என்று ரசிகர்கள் கூறினர்.

           

இந்த ஐபிஎல் தொடரில் பெரும்பாலான போட்டிகளில் வாட்சன் சரியாக விளையாடவில்லை. அவர் மீது நிறைய விமர்சனங்கள் வந்தது. அப்படி இருந்தும், வாட்சன் மீது நம்பிக்கை வைத்து தோனி தொடர்ந்து ஆட வைத்தார். ‘வாட்சன் வெற்றியின் நாயகன்’ என்றும்  ஒருமுறை கூறியிருந்தார் தோனி.

       

அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் வகையில் ஹைதராபாத் அணிக்கு எதிராக தன்னுடைய அதிரடியாக வெற்றியை பரிசளித்தார் வாட்சன். தோனி, வாட்சன் மீது வைத்த நம்பிக்கையை குறிப்பிட்டு சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர். 

#WatsontheLegend, #WattoMan, #WhistlePodu4Ever உள்ளிட்ட ஹேஷ்டேக்குகளில் சென்னை ரசிகர்கள் வாட்சனை பாராட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

           

இதோ சென்னை அணியின் மீம்ஸ்கள் சில:-

          

         

       

         

          

         

          

         

          

         

        

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close