[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

தோனியின் முடிவு பலமுறை தவறாகி இருக்கிறது: குல்தீப் யாதவ்

ms-dhoni-goes-wrong-with-his-tips-a-lot-of-times-says-kuldeep-yadav

தோனி எடுக்கும் முடிவுகள் பலமுறை தவறாகவும் போகும் என்று இந்திய சுழல் பந்துவீச்சாளர் குல்தீய் யாதவ் தெரிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. விக்கெட் கீப்பரான அவர் எடுக்கும் முடிவுகள், அணிக்கு பலமுறை வெற்றியைத் தேடி தந்திருப்பதாக கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். ’தோனி அணியில் இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை’ என்று தெரிவித் திருக்கிறார், இந்திய கேப்டன் விராத் கோலி. துணை ரோகித் சர்மா உட்பட பல வீரர்களும் தோனியின் ஆலோசனை தங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளனர். இதற்கிடையே இந்த ஐபிஎல் தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதின. இதில் சென்னை அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்நிலையில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட, இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிடம், தோனி ஆலோச னை பற்றி கேட்டபோது, ‘’ அவர் தேவையில்லாமல் மைதானத்துக்குள் பேசமாட்டார். ஏதும் சொல்ல வேண்டும் என்றால், ஓவர்களுக்கு இடை யே பேசுவார். அப்போது அவர் சில டிப்ஸ்களை கொடுப்பார். அப்படி அவர் சொல்லும் டிப்ஸ்கள் பலமுறை தவறாகப் போயிருக்கிறது. ஆனால், அதை அவரிடம் நாங்கள் சொல்ல முடியாது’’ என்று சிரித்துக்கொண்டே தெரிவித்துள்ளார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close