[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

பேட்டிங்கில் தடுமாறிய மும்பை : சென்னைக்கு 150 ரன்கள் இலக்கு

mumbai-vs-chennai-final-150-runs-target-for-csk

சென்னை அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை அணி 149 ரன்கள் சேர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய மும்பையில் அணியில் தொடக்க ஆட்டக்காரரான டி காக் ஆரம்பம் முதலே சிக்ஸர் மழை பொழிந்தார். மற்றொரு புறம் ரோகித் ஷர்மா பொறுப்புடன் ஆடினார். டி காக் 29 (17) ரன்கள் எடுத்திருந்த போது தகூர் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதைத்தொடர்ந்து சாஹர் வீசிய பந்தில் ரோகித் ஷர்மா 15 (14) ரன்களில் வெளியேறினார்.

பின்னர் சூர்யகுமார், இஷான் கிஷண் இருவரும் ஜோடி சேர்ந்தனர். ஆனால் சூர்யகுமார் 15 (17) ரன்களில் தஹிரிடம் போல்ட் ஆனார். அதைத்தொடர்ந்து இஷான் 23 (26) ரன்களில் வெளியேற, குருனல் பாண்ட்யா 7 (7) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்த பொலார்ட் மற்றும் ஹர்திக் பாண்ட்யா அதிரடியை வெளிபடுத்தினர். 16 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 16 (10) ஹர்திப் பாண்ட்யா அவுட் ஆகினார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 149 ரன்கள் சேர்த்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் பொலார்ட் 41 (25) ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் சாஹர் 3 விக்கெட்டுகளும், தகூர் மற்றும் தஹிர் தலா இரண்டு விக்கெட்டுகளை சாய்த்தனர். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close