[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திரயான் -2, நிலவின் வட்டப் பாதையைச் சுற்றத் தொடங்கியது
  • BREAKING-NEWS பால் உற்பத்தியாளர்கள்-மக்கள் இடையே பிளவை ஏற்படுத்த முதல்வர் பழனிசாமி முயற்சிக்கிறார் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு. கோரிக்கை குறித்து சிறைத்துறை பதிலளிக்க உத்தரவு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

டாஸ் வென்றது மும்பை : சென்னை முதலில் பவுலிங்

mumbai-vs-chennai-final-mi-won-the-toss-and-bat-first

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை டாஸ் வென்றது.
 
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது.
ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், மும்பை டாஸ் வென்றது. இதில் மும்பை
முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்ததால், சென்னை அணி முதலில் பந்துவீசவுள்ளது. 

மும்பை அணியில் ஜெயந்த் யாதவிற்கு பதிலாக மெக்லெநகன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை அணியில் மாற்றம் எதுவும்
செய்யப்படவில்லை. இன்றைய போட்டியில் வெல்லும் அணி கோப்பையை வெல்லும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு
அதிகம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மும்பை அணியிடம் இந்தத் தொடரில் மட்டும் மூன்று போட்டிகளில் சென்னை தோற்றுள்ளதால்,
இன்றைய போட்டியில் சென்னை வெல்ல வேண்டும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்னை ரசிகர்கள் உள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close