[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

சென்னை மற்றும் மும்பை அணியில் விளையாடும் 11 பேர் ?

mumbai-vs-chennai-final-both-teams-probable-xi

இன்றைய ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகளில் விளையாடவுள்ள 11 பேர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டி இறுதிப் போட்டி என்பதால் இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுவதால், இரண்டு அணிகளும் சம பலத்துடன் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

அதே நேரம் வேகப்பந்து வீச்சு ஹைதராபாத் மைதானத்தில் நன்றாக எடுபடும் என்பதால் மும்பை அணி பந்துவீச்சில் சற்று பலமாக இருக்கும். ஏனென்றால் அந்த அணியில் பும்ரா, மலிங்கா எனும் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். ஆனால் சென்னை அணியில் தீபக் சாஹர் மட்டுமே உள்ளார். மற்றொரு வீரரான ஷர்துல் தகூர் நிலையான மற்றும் சிறந்த பந்துவீச்சை வெளிப்படுத்தவில்லை. எனவே அவர் அணியில் இடம் பெறுவது சந்தேகம்தான். இந்நிலையில் இரண்டு அணிகளிலும் இடம்பிடிக்கும் 11 வீரர்களின் உத்தேச பட்டியலை காண்போம்.

மும்பை அணி : குயிண்டான் டி காக், ரோகித் ஷர்மா, சூர்ய குமார், இஷான் கிஷான், ஹர்திக் பாண்ட்யா, குருனல் பாண்ட்யா, கிரான் பொலார்ட், பென் கட்டிங், ராகுல் சாஹர், லஷித் மலிங்கா, ஜஸ்ப்ரிட் பும்ரா. இதில் பென் கட்டிங்கிற்கு பதில் மெக்லெநகன் சேர்க்கப்பட வாய்ப்பிருக்கிறது.

சென்னை அணி : ஷேன் வாட்சன், டு பிளசிஸ், முரளி விஜய், சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு, தோனி, பிரவோ, ரவீந்திர ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங், இம்ரான் தஹிர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close