[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

“அதனால்தான் அவர் ‘தல’ தோனி” - மேத்யூ ஹைடன் நெகிழ்ச்சி

ms-dhoni-is-not-just-a-player-he-is-an-era-of-cricket-matthew-hayden

எம்.எஸ்.தோனி ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, கிரிக்கெட்டின் ஒரு சகாப்தம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு இடையே ஹைதராபாத் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா மூன்று முறை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளதால், இன்றைய போட்டியில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

                     

இந்நிலையில், சென்னை அணியின் கேப்டன் தோனி குறித்து மேத்யூ ஹைடன் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். , “தோனியை உங்களுக்கு தெரியும். அவர் ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல. கிரிக்கெட் விளையாட்டின் ஒரு சகாப்தம். பல வகையில் யோசித்தாலும், நம்ம ஏரியா கிரிக்கெட் அணியின் கேப்டனை போலவே தோனி தெரிகிறார். அவர் நம்முள் ஒருவர். அவரால் எதனையும் செய்ய முடியும்.

                    

நண்பர்களுடனும், குடும்பத்தினுடனான வாழ்க்கையில் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருக்கும் நம்மால், தோனியை நம்முடன் எளிதில் பிணைத்துக் கொள்ள முடிகிறது. ஏனெனில், அவர் உங்களை அமைதிப்படுத்த வைக்கிறார். உங்களை ரிலாக்ஸாக வைக்கிறார். அதனால்தான் அவர் ‘தல’ தோனி. ‘தல’ என்ற சொல் சென்னைக்கு தலைவர் என்பதை தான் குறிக்கும். ஆனால், கிரிக்கெட் உலகில் தேசத்திற்கே அவர்தான் தலையாக உள்ளார்” என்று கூறியுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close