[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி

ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்: ஹர்பஜன் சிங் மகிழ்ச்சி!

harbhajan-singh-becomes-3rd-indian-to-take-150-wickets-in-ipl

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே, இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 9 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்தது. ரிஷப் பண்ட் 38 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில், ஹர்பஜன், ஜடேஜா, பிராவோ, சாஹர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.148 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய சென்னை அணியில், டு பிளிசிஸ் 50(39), ஷேன் வாட்சன் 50(32) ரன் எடுத்து நல்ல தொடக்கம் கொடுத்தனர். சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 19 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி 8 வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப் போட்டி யில் மும்பை அணியை, சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொள்கிறது. 

இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் சத்தமின்றி சாதனைப் படைத்திருக்கிறார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங். நேற்றைய போட்டியில் ஷிகர் தவான், ருதர்போர்ட் ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார் ஹர்பஜன். 150 விக்கெட் வீத்தியதற்கு அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

ஏற்கனவே அமித் மிஷ்ரா, சாவ்லா ஆகியோர் இந்த சாதனையை படைத்துள்ளனர். மிஸ்ரா 147 போட்டிகளில் 157 விக்கெட்டுகளும் சாவ்லா 157 போட்டிகளில் 150 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். ஐபிஎல் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரராக ஹர்பஜன் இருக்கிறார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close