[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தை சகாரா பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி தரும் முடிவை பாஜக கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ரூ.6 கோடி சொத்து வரி பாக்கி செலுத்தாததால் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு பேரூராட்சி நிர்வாகம் ஜப்தி எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியது
  • BREAKING-NEWS காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சமூக செயற்பாட்டாளர் முகிலன் காணாமல்போன வழக்கில் சிபிசிஐடி விசாரணை சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம்

தோனி போல போட்டியை கணிக்கும் திறமை கோலியிடம் இல்லை: பயிற்சியாளர் தகவல்

virat-kohli-doesn-t-have-ms-dhoni-s-match-reading-skills-dhoni-s-childhood-coach

மகேந்திர சிங் தோனி போல போட்டியை கணிக்கும் திறமை, விராத் கோலியிடம் இல்லை என்று தோனியின் சிறுவயது பயிற்சியாளர் கேஷாப் ரஞ்சன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் உள்ள அண்டூலில், எம்.எஸ்.தோனி கிரிக்கெட் அகாடமியில் கோடைகால பயிற்சி முகாம் நேற்று தொடங்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கேஷாப் ரஞ்சன் பானர்ஜி, ’’போட்டியை கணித்து அதன்படி செயல்படுவதில் தோனிக்கு நிகர் யாருமில்லை. தற்போதைய இந்திய கேப்டன் விராத் கோலிக்கு அந்த திறமை இல்லை. அதனால், அவர் தோனியிடம் ஆலோசனை கேட்கும் நிலைமை இருக்கிறது. தோனி, அணியில் இல்லை என்றால், விராத் கோலிக்கு வேறு யாரும் உதவ முடியாது. தோனி யின் ஆலோசனை மட்டுமே விராத் கோலிக்கு உதவும். 
நான்காவது வரிசையில் இறங்கும் வீரர் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகிறது. என்னைப் பொறுத்தவரை அந்த இடத்தில் தோனி தான் களமிறங்க வேண்டும். அவர் நான்காவது வீரராக களமிறங்கினால் அடுத்து வருபவர்கள், பதட்டம் இல்லாமல் விளையாட முடியும். அவர் ஓய்வு பெறுவது பற்றி கேட்கிறார்கள். அவரது உடல் தகுதியை நீங்கள் பார்க்கவில்லையா? உடல் தகுதிதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கும். அதுபற்றி நானோ, அவர் மனைவியோ, ஏன் அவர் தந்தையோ கூட கூற முடியாது. ரிஷாப் பன்ட்டுக்கு உலகக் கோப்பையில் வாய்ப்பளிக்காதது பற்றி கேட்கிறார்கள். அவருக்கு இன்னும் வயதிருக்கிறது. வாய்ப்பு கண்டிப்பாக வரும்’’ என்றார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close