[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

‘நாக் அவுட்’ தொடர் தோல்விக்கு முற்றுப் புள்ளி வைக்குமா டெல்லி அணி?

will-dc-register-their-maiden-win-in-an-ipl-knockout-game-or-will-srh-make-it-to-the-qualifier-2-for-the-second-year-in-a-row

விசாகப்பட்டினத்தில் நடைபெறும் பிளே ஆஃப் தகுதிச் சுற்றுப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை டெல்லி கேபிடல்ஸ் எதிர்கொள்கிறது.

ஐபிஎல் தொடரில் இதுவரை 3 முறை பிளே ஆஃப் சுற்றுக்கு டெல்லி அணி தகுதி பெற்றுள்ளது. ஆனால், 3 தொடரிலும் அந்த அணி தோல்வியை தழுவியது. முதன்முறையாக 2008ம் ஆண்டில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 105 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 2009ம் ஆண்டு டெக்கன் சார்ஜஸ் (ஹைதராபாத்) அணியிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

     

அதேபோல், 2012ல் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று இரண்டு போட்டிகளில் விளையாடியது. அதாவது முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா அணியுடன் மோதி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. பின்னர், 2வது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை அணியை எதிர் கொண்டது. ஆனால், அந்தப் போட்டியிலும் 86 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில், நடப்பு ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணி சிறப்பாக விளையாடி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது. தொடக்கத்தில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதியாக ரன்ரேட் அடிப்படையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இன்று நடைபெறும் தகுதிச் சுற்றுப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை டெல்லி கேபிடல்ஸ் எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

       

டெல்லி அணியைப் பொருத்தவரை கடைசியாக விளையாடிய 9 போட்டிகளில் 7இல் வென்றுள்ளது. அதேபோல், ஹைதராபாத் அணி கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 7இல் தோல்வியை தழுவியுள்ளது. கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஹைதராபாத் தோல்வி அடைந்தது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close