[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

டாஸ் வென்றது சென்னை : முதலில் பேட்டிங் செய்ய முடிவு

mumbai-vs-chennai-qualifier-1-chennai-opt-to-bat

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் சென்னை அணி டாஸ் வென்றது.

ஐபிஎல் போட்டிகளின் லீக் போட்டிகள் நிறைவடைந்து, மும்பை, சென்னை, டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. இதில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே இன்று இறுதிப் போட்டிக்கான தகுதிச்சுற்று போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு செல்லலாம் என்பதால், இரு அணிகளும் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளன.

போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுவதால், அரங்கம் முழுவதிலும் சென்னை ரசிகர்கள் குவிந்துள்ளனர். இந்நிலையில் சென்னை அணி டாஸ் வென்றுள்ளது. எப்போதும் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யும் சென்னை கேப்டன் தோனி, இந்த முறை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். சென்னையில் மழை வரும் வகையில் மேக மூட்டமாக இருப்பதால், அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனப்படுகிறது. ஏனென்றால் மழை பெய்துவிட்டால், 2வது பேட்டிங்கில் பந்துகள் பவுண்டரி செல்வது கடினமாகிவிடும்.

சென்னை அணியில் கேதர் ஜாதவிற்கு பதிலாக முரளி விஜய் சேர்க்கப்பட்டுள்ளார். மும்பையில் மெக்லெனகனுக்கு பதில் ஜெயந்த் யாதவ் அணியில் இடம்பிடித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close