[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி

ஐபிஎல் போட்டியும் சேப்பாக்க மைதானமும் - கடந்த கால ரிசல்ட் எப்படி? 

csk-takes-on-mi-in-ipl-qualifier-i-at-chepauk

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்று இன்று தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் போட்டியில், இறுதிப் போட்டிக்கான முதலாவது தகுதிச் சுற்றில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸும் மோதுகின்றன. 

இந்நிலையில் இன்று போட்டி நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் ஐபிஎல் போட்டிகளில் எவ்வாறு இருந்துள்ளது என்பது பற்றி ஆராய்வோம். 

சேப்பாக்கம்:
மொத்த ஐபிஎல் போட்டிகள்: 51
முதலில் பேட்டிங் செய்த அணி: 32 வெற்றி
இரண்டாவது பேட்டிங் செய்த அணி: 19 வெற்றி
சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 164
சராசரி இரண்டாவது இன்னிங்ஸ் ஸ்கோர்: 151
அதிகபட்ச ஸ்கோர்: சென்னை அணி 246/5 vs ராஜஸ்தான் அணி
குறைந்த ஸ்கோர்: பெங்களூர் 70 vs சென்னை அணி
அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்ட ஸ்கோர்: சென்னை 208/5 vs பெங்களூர் அணி
குறைந்தபட்சமாக டிஃபெண்ட் செய்யப்பட்ட ஸ்கோர்: சென்னை அணி 151 ரன்களை கொல்கத்தா அணிக்கு
எதிராக வெற்றிகரமாக டிஃபெண்ட் செய்தது.

சேப்பாக்கத்தில் சென்னை மற்றும் மும்பை அணிகள் இதுவரை 7 போட்டிகளில் விளையாடிவுள்ளனர். அதில் மும்பை 5 முறையும், சென்னை 2 போட்டியிலும் வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.  இந்த இரு அணிகளும் இதுவரை 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. இதனால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close