[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

இறுதிப் போட்டியில் நுழைவது யார்? சேப்பாக்கத்தில் தோனி, ரோகித் இன்று மோதல்!

rohit-sharma-s-best-laid-plans-v-ms-dhoni-s-instincts

ஐபிஎல் தொடரில் முதல் பிளே ஆப் சுற்று போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கிறது. இதில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன.

12-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 23 ஆம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது. எட்டு அணிகள் பங்கேற்ற இந்தp போட்டியில் லீக் சுற்று முடிந்து, முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இண்டியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறின. 

இந் நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடக்கும் போட்டியில், இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் ரோகித் சர்மா தலை மையிலான மும்பை இண்டியன்ஸ் அணியும் தல தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும் மோதுகின்றன. 3 முறை சாம்பியன் களான இந்த அணிகள் மோதுவதால் இன்றைய போட்டியில் அனல் பறக்கும்.

இதுவரை பங்கேற்ற அனைத்து ஐபிஎல் தொடரிலும் லீக் சுற்றை தாண்டிய ஒரே அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது. எட்டாவது முறையாக இறுதிச்சுற்றுக்கு செல்லும் தீவிரத்தில் அந்த அணி இருக்கிறது.

சென்னை அணியில், கேப்டன் ’தல’ தோனி, சுரேஷ் ரெய்னா, டு பிளிசிஸ் நல்ல ஃபார்மில் உள்ளனர். கேதர் ஜாதவ் இல்லாதது அணிக்கு பின்னடைவுதான். அவருக்குப் பதிலாக முரளி விஜய் அல்லது அருண் ஷோரி களமிறக்கப்படலாம். கடந்த தொடரில் கலக்கிய ராயுடு, வாட்சன் ஆகியோர் இந்த தொடரில் சொல்லிக்கொள்ளும்படி ரன் சேர்க்கவில்லை. வாட்சன், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் 96 ரன் எடுத்தார். இன்றைய போட்டி முக்கியமானது என்பதால் அவர் அதிரடி காட்டுவார் என்று நம்பலாம். 

சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால் ஹர்பஜன் சிங், ஜடேஜா, இம்ரான் தாஹிர் ஆகியோரின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும். இதற்கு முன் இங்கு நடந்த போட்டிகளிலும் இவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 

மும்பை இண்டியன்ஸ் பேட்டிங், பந்துவீச்சு என பலம் வாய்ந்த அணியாக இருக்கிறது. இந்த தொடரில் மும்பை அணிக்கு எதிராக நடந்த இரண்டு போட்டிகளிலும் சென்னை அணி தோல்வி அடைந்திருக்கிறது. உள்ளூரில் சென்னையை வென்ற ஒரே அணியும் அதுதான். அதோடு, இரண்டு அணிகளும் 26 போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில், 15-ல் தோல்வி அடைந்திருக்கிறது சென்னை அணி. 

மும்பை அணியில், கேப்டன் ரோகித், ஹர்திக் பாண்ட்யா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பொல்லார்ட் ஆகியோர் ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் பும்ரா, மலிங்கா, ராகுல் சாஹர், குணால் பாண்ட்யா ஆகியோர் மிரட்டுகிறார்கள். 

இன்றைய போட்டியில் வெல்லும் அணி, இறுதிப்போட்டிக்கு நேரடியாகச் செல்லும். தோற்கும் அணிக்கு மற்றொரு வாய்ப்பு. வெளியேறுதல் சுற்றில், வெற்றி பெறும் அணியுடன் 2-வது தகுதி சுற்றில் மோதும். போட்டி இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close