[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கு ஜூலை 18ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலங்களுக்கான பட்டியலில், கடந்தாண்டு 3வது இடத்திலிருந்த தமிழகம் இந்த ஆண்டு 9வது இடத்திற்கு பின்தங்கியது
  • BREAKING-NEWS குடிநீருக்காக கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை திமுக அரசு கொண்டு வந்தது; அத்திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தியிருந்தால் தமிழகம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்திருக்காது - மக்களவையில் தயாநிதி மாறன் எம்.பி. பேச்சு
  • BREAKING-NEWS ஜூலை மாதத்துக்கான 31.24 டிஎம்சி நீரை கர்நாடகா திறந்து விட உத்தரவிட வேண்டும் .கர்நாடக அரசு தண்ணீர் வழங்காததாலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாலும் ஜூன் 12ல் மேட்டூர் அணையை திறக்க இயலவில்லை - டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
  • BREAKING-NEWS இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமனம்

ஐபிஎல்-லில் இன்று 2 போட்டி: 100-வது வெற்றிக்கு காத்திருக்கிறது சிஎஸ்கே!

will-csk-score-their-100th-ipl-win-tonight

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடக்கின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மாலை 4 மணிக்கு மொகாலியில் நடக்கிறது. புள்ளிப் பட்டியலில் முதலில் இடத்தில் இருக்கும் சென்னை அணி, அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றுவிட்டது. எதிர்த்து போட்டியிடும் பஞ்சாப் அணி, அடுத்த சுற்றில் இருந்து கிட்டதட்ட வெளியேறி விட்டது. 

இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் ஐ.பி.எல்-லில் சென்னை அணியின் 100-வது வெற்றியாக இருக்கும். சிஎஸ்கே-வில் கேப்டன் தோனி, சுரேஷ் ரெய்னா, டு பிளிசிஸ் பேட்டிங்கில் ஃபார்மில் உள்ளனர். பந்து வீச்சில் சுழற்பந்துவீச்சாளர்கள் இம்ரான் தாஹிர், ஜடேஜா, வேகப்பந்துவீச்சாளர் தீபக் சாஹர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்துகிறார்கள். வாட்சன், ராயுடு, கேதர் ஜாதவ் ஏமாற்றி வருகின்றனர். இன்றைய போட்டியில் இவர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சென்னையின் வெற்றி எளிதாகும். 

 

மும்பை இண்டியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி, இரவு 8 மணிக்கு வான்கடே மைதானத்தில் நடக்கிறது. மும்பை அணி ஏற்கனவே அடுத்தச் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. கொல்கத்தா அணி இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே  அடுத்த சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். தோற்றால் அவுட்!

ஐதராபாத் அணி ரன் ரேட் அடிப்படையில் வலுவாக இருப்பதால், அடுத்த சுற்று வாய்ப்பு அதற்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. அந்த அணி, ஆந்த்ரே ரஸலை அதிகம் நம்புகிறது. பேட்டிங், பந்துவீச்சு என அவர் மிரட்டுகிறார். கடந்த இரண்டு போட்டிகளில் சுப்மான் கில் சிறப்பாக ஆடுகிறார். கிறிஸ் லின், கேப்டன் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அதிரடியாக விளையாடுகின்றன. கடந்த போட்டியில் பெற்ற வெற்றி கொல்கத்தாவுக்கு புதிய தெம்பை தந்திருக்கிறது.

கடந்த 28-ஆம் தேதி இந்த இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் கொல்கத்தா அணி 232 ரன் குவித்து மிரட்டியது. அதற்கு பதிலடி கொடுக்க மும்பை வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் தீவிரம் காட்டுவார்கள். அந்த அணியில், ஹர்திக் பாண்ட்யா, டி காக், கேப்டன் ரோகித் சர்மா, பொல் லார்ட் என அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பு பஞ்சமிருக்காது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close