[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிதாக 6 மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கான அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் வெளியீடு
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் அமலுக்கு வந்தது குடியரசுத் தலைவர் ஆட்சி
  • BREAKING-NEWS சென்னையில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட காற்று மாசு குறைந்துள்ளது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர்: கந்தர்பால் அருகே கண்ட்டில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரும் 14ஆம் தேதிமுதல் 16ஆம் தேதிவரை 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS அயோத்தியில் ராமர் கோயில்: அறக்கட்டளை அமைக்கும் பணி தொடக்கம்

‘10 ஓவரில் அடிச்சு முடிக்கணும்’ - சிஎஸ்கேவை பின்னுக்கு தள்ளுமா டெல்லி அணி

if-dc-win-this-in-10-overs-they-will-go-past-csk-dc-need-to-look-at-this-like-a-10-over-game

ராஜஸ்தான் நிர்ணயித்துள்ள 116 ரன்களை 10 ஓவர்களில் அடித்தால், டெல்லி அணிக்கு கூடுதல் புள்ளிகள் கிடைத்து முதலிரண்டு இடங்களுக்கான வாய்ப்பு மேலும் உறுதியாகும்.

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இஷாந்த் சர்மாவின் அசத்தலான பந்துவீச்சில் ரகானே, லிவிங்ஸ்டன் லோம்ரார் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அதேபோல், மிஸ்ரா தன்னுடைய பங்கிற்கு கோபால், பின்னி, கௌதம் விக்கெட்களை சாய்த்தார். ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 115 ரன் மட்டுமே எடுத்தது. 

               

116 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி தற்போது விளையாடி வருகிறது. டெல்லி அணி இந்த இலக்கை 10 ஓவரில் எட்டினால், சென்னை சூப்பர் கிங்ஸை பின்னுக்கு தள்ளி முதல் இடத்திற்கு சென்றுவிடும். 

புள்ளிப் பட்டியலில் 9 வெற்றிகளுடன் சிஎஸ்கே முதலிடத்தில் உள்ளது. ஆனால், அதன் வசம் 0.209 புள்ளிதான் உள்ளது. ஆனால், 8 வெற்றிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள மும்பை அணி 0.321 புள்ளிகள் பெற்றுள்ளது. கடந்தப் போட்டியில் சென்னை அணியிடம் மோசமான தோல்வி அடைந்ததால், டெல்லி அணி தற்போது -0.096 புள்ளிகள் மட்டுமே வைத்திருக்கிறது. இந்தப் போட்டியில் 10 ஓவர்களில் இலக்க எட்டினால், டெல்லி அணிக்கு கூடுதல் புள்ளிகள் கிடைக்கும். முதல் இரண்டு இடங்களுக்கான வாய்ப்பை தக்கை வைக்கும். 

                   

மும்பை, சென்னை அணிகளின் வெற்றி தோல்வியை பொருத்து ரன் ரேட் அடிப்படையில் இடங்கள் மாறும். நாளை நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் முதலிரண்டு இடத்தை பிடிக்கும். மும்பை வெற்றி பெறும் பட்சத்தில் அதற்கும் முதலிரண்டு இடங்களுக்கான வாய்ப்பு உறுதியாகும். 

                    

புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு கூடுதலாக ஒரு வாய்ப்பு கிடைக்கும். பிளே ஆஃப் சுற்றில் தோல்வி அடைந்தாலும், 3வது மற்றும் 4வது இடங்களை பிடித்த அணிகளுக்கு இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் வாய்ப்பு கிடைக்கும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close