[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

“உலகக் கோப்பையில் ஆல்-ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா அசத்துவார்”- யுவராஜ் சிங் நம்பிக்கை

yuvraj-singh-makes-bold-prediction-about-all-rounder-hardik-pandya

உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா இந்தியாவிற்கு முக்கியமான வீரராக அமைவார் என்று இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. லீக் போட்டிகளில் வரும் ஞாயிற்றுகிழமையுடன் நிறைவடைகிறது. அதை தொடர்ந்து பிளே ஆஃப் சுற்று, ஃபைனல் மட்டுமே மீதமுள்ளது. இதனால் இந்திய அணி ஏறக்குறைய உலகக் கோப்பைக்கு தயாராகும் நிலைக்கு வந்துள்ளது. உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம் பெற்றுள்ளார். அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அசத்தலாக விளையாடி வருகிறார். இவர் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் இறங்கி சுலபமாக சிக்சர் மற்றும் பவுண்டரிகள் விளாசி வருகிறார். 

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா முக்கிய வீரராக இருப்பார் என்று இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “ஹர்திக் பாண்ட்யாவின் தற்போதைய ஃபார்ம் மிகவும் சிறப்பாக உள்ளது. அவர் இதே ஃபார்மில் தொடர்ந்தால் உலகக் கோப்பையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆகிய இரண்டிலுமே நன்றாக செயல்படுவார்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று தடை விதிக்கப்பட்டதை அடுத்து, தற்போது மீண்டும் இயல்பான ஆட்டத்திற்கு அவர் திரும்பியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 91 ரன்கள் அடித்ததே மிகவும் சிறப்பான ஆட்டமாக அமைந்தது. ஏனென்றால் கொல்கத்தா அணியில் நான்கு உலக தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர்.

மேலும் இதுகுறித்து நான் ஹர்தித் பாண்ட்யாவிடமும் பேசினேன். அவரிடம் நீங்கள் அதிரடியான ஆட்டத்தை நன்றாக வெளிப்படுத்தி வருகிறீர்கள். அதனால் வரும் உலகக் கோப்பை தொடர் உங்களுக்கு சிறப்பாக அமையும். கடுமையான நேரங்களில் நீங்கள் எவ்வாறு செயல்படுகிறீர்களோ அது தான் உங்களின் வெற்றியை தீர்மானிக்கும் என கூறினேன். அத்துடன் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நான்கவது இடத்தில் யார் விளையாடுவார் என்பது தெளிவாக தெரியவில்லை. 

என்னை பொறுத்தவரை 4வது இடத்தில் களமிறங்குபவர் அதிக அனுபவ வீரராக இருக்கவேண்டும். அதேபோல முதல் 5 இடத்தில் களமிறங்கும் வீரர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருந்தால் அணிக்கு கூடுதல் சிறப்பாக இருக்கும். இந்தாண்டு உலகக் கோப்பை சூழல் சற்று கடினமாகதான் இருக்கும். ஏனென்றால் உலகிலுள்ள தலை சிறந்த அணிகள் உலகக் கோப்பையை வெல்ல களமிறங்குவதால் அணிகளிடையே கடும் போட்டி நிலவும். இந்த இக்காட்டான சூழலை இந்திய அணியின் வீரர்கள் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார்கள் என்பது பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும்” எனக் கூறுயுள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:

[X] Close