[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேதார்நாத்தில் வழிபட்டதை நான் அதிர்ஷ்டமாக நினைக்கிறேன்; எனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளது - பிரதமர் மோடி

அரைசதம் விளாசிய சாம் குரன் : கொல்கத்தாவுக்கு 184 ரன் இலக்கு

cricket-score-kolkatta-and-punjab-team

கொல்கத்தா அணிக்கு எதிரான லீக் போட்டியில் 184 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பஞ்சாப் அணி.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள்  விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் தொடக்கத்திலேயே தடுமாறியது. ராகுல் 7 பந்துகளுக்கு 2 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். தொடர்ந்து கெயிலும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஜோடி சேர்ந்த அகர்வாலும் பூரானும் சற்று நிதானமாக ஆடி ஆட்டத்தை தங்கள் பக்கம் கொண்டு வந்தனர். பூரான் சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசினார். பூரான் 27 பந்துகளுக்கு 48 ரன்களுடனும், அகர்வால் 38 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். 

                             

இதைதொடர்ந்து களமிறங்கிய மந்தீப் சிங்கும், சாம் குரனும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். இதில் சாம் குரன் 24 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். மந்தீப் சிங் 17 பந்துகளில் 25 ரன்களை எடுத்தார். 

கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களை பொறுத்தவரை வாரியர் 2 விக்கெட்டுகளையும் குர்னே, ரஸல், ரானா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்களை பஞ்சாப் அணி எடுத்தது. 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கி விளையாடி வருகிறது. 3 ஓவர்களுக்கு 20 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close