[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

தோனியால் இந்தியாவிற்கு உலகக் கோப்பை - மிரட்டும் ‘தல’ ஸ்டைல்

india-will-again-win-the-world-for-ms-dhoni

தோனியின் திறமையால் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் சூழல் அதிகரித்துள்ளது.

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் வரும் 30ஆம் தேதி தொடங்குகிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய நாடுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரில் விளையாடும் வீரர்களை அனைத்து அணிகளும் அறிவித்துவிட்டன. இந்திய அணியில் விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி, கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்திப் யாதவ், யஸ்வேந்திர சாஹல், ஜஸ்ப்ரிட் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமத் ஷமி, ரவீந்திர ஜடேஜா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடைபெறுவதால் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி பலமாக இருக்கும். அத்துடன் அந்த அணியில் கீப்பர்களான பட்லர் மற்றும் பேரிஸ்டோவ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி நல்ல ஃபார்மில் உள்ளனர். அத்துடன் கேப்டன் இயான் மார்கன் நிலைத்து விளையாடக்கூடியவர். ஆல்ரவுண்டர் மொயின் அலி, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், டாம் குரான் மற்றும் ஜாசன் ராய் உள்ளிட்ட பலரும் அந்த அணியில் ஃபார்மில் உள்ளனர். இதனால் அந்த அணி அனைத்து அணிகளுக்குமே சவாலாக இருக்கும். கடந்த ஆண்டு கூட இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்றிருந்தபோது, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் தோற்றது. 

ஆனாலும் இன்று களம் மாறியுள்ளது. தோனியின் மீதுள்ள நம்பிக்கையிலும், அவரது தலைமைப் பண்பாலும் உலகக் கோப்பையை இந்தியா வெல்லும் எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தியாவின் முன்னாள் கேப்டனான சுனில் காவஸ்கர் தோனி படை மாஸாக உலகக் கோப்பை வெல்லும் எனக் கூறியுள்ளார். 

2011-ல் விளையாடிய இந்திய அணியின் பந்துவீச்சில் பெரிதாக பலம் என்று எதுவும் இல்லை. ஆனால் இன்றைய இந்திய அணி பலமுடன் உள்ளது. தோனியும் சரியான ஃபார்மில் உள்ளார். ஐபிஎல் போட்டிகள் சிறப்பாக விளையாடி பேட்டிங்கில் முழு திறமையுடன் உள்ளார். கீப்பிங்கிலும் அசத்துகிறார். அவரது கேப்டன்ஷிப்பும் பிரமாதம் எனவே கண்டிப்பாக இந்தியா கோப்பையை வெல்லும் எனக் கூறியுள்ளார்.

கவாஸ்கர் கூறுவதில் தோனி மட்டுமின்றி இந்திய அணியே பலத்துடன் இருக்கிறது என்ற வார்த்தை முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கிலாந்து அணியில் ஃபார்மில் இருப்பவர்கள் குறித்து பார்த்தோம். அதேபோன்று இந்திய அணியை பார்க்கும் போது தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகர் தவான் மற்றும் ரோகித் ஷர்மா இருவரும் எப்படிபட்ட பந்துவீச்சையும் சிதறடிக்கும் தன்மையுடன் உள்ளனர்.

அதற்கு அடுத்தபடியாக களமிறங்கும் ‘ரன் மிஷன்’ கோலியை விக்கெட் எடுப்பதற்குள் எந்த ஒரு அணிக்கு நாக்கு தள்ளிவிடும். அதற்கு அடுத்தபடியாக 4ஆம் இடத்தில் தோனியை களமிறக்க இந்திய அணி முடிவு செய்துள்ளது. தோனி இறங்கினால் பெரும்பாலும் கடைசி பந்துவரை விளையாடும் பழக்கம் உடையவர். அவரைத் தொடர்ந்தும் கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் ஷங்கர் எனப் பெரும் பேட்டிங் பட்டாளமே இந்தியாவில் ஃபார்மில் உள்ளது.

அதுமட்டுமின்றி பவுலிங்கில் பும்ரா உலகின் சிறந்த பவுலர்களில் ஒருவராக உள்ளார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அவரது பந்துவீச்சை கடைசி ஓவரில் அடித்து விளையாடுவது ஒரு பேட்ஸ்மேனுக்கு கூட சிரமான ஒரு விஷயமாக உள்ளது. 

அத்துடன் முகமத் ஷமி ரன்களை கொடுத்தாலும் இக்கட்டான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் திசையை மாற்றும் தன்மையை கொண்டவராக இருக்கிறார். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவதில் புவனேஷ்குமார் தனித்துவம் பெற்றவராக உள்ளார். இங்கிலாந்து மைதனாங்கள் பெரிதானவை என்பதால் அங்கு கண்டிப்பாக குல்தீப் யாதவ் மற்றும் சாஹல் பந்துகளை அடிப்பவர்கள் கேட்ச் ஆகமால் தப்பிப்பது கஷ்டம். இப்படி இந்திய அணியே ஃபார்மில் இருக்கிறது. இதனால் இங்கிலாந்து சவாலாக இருக்கும் ஒரே அணியாக இந்தியா திகழும். இதையெல்லாம் தாண்டிய தோனியின் அனுபவம் கண்டிப்பாக கோப்பை வெல்ல பெரும் துணையாக இந்தியாவிற்கு நிற்கும்.

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் தோனி முதல் போட்டியில் களமிறங்கவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான 2வது போட்டியில் 31 (25), அயர்லாந்துக்கு எதிரான 3வது போட்டியில் 34 (50), நெதர்லாந்துக்கு எதிரான 4வது போட்டியில் 19* (40) (நாட் அவுட்), தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 5வது போட்டியில் 12* (21) (நாட் அவுட்), வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 6வது 22 (30) ரன்கள் எடுத்திருந்தார். 

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான காலிறுதியில் 7 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தாலும், பாகிஸ்தானிற்கு எதிரான அரையிறுதியில் 25 (42) ரன்களை சேர்த்தார். மேலும், முக்கியப் போட்டியான இறுதிப் போட்டியில் இலங்கைக்கு எதிராக 79 பந்துகளில் 91 ரன்களை குவித்து இந்திய அணியை பெற்றி பெறச்செய்தார். வின்னிங் ஷாட்டாக அவர் அடித்த சிக்ஸரை இந்திய ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். அதேபோன்று மற்றொரு கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு அளிப்பார் என அனைவரும் காத்திருக்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close