[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளிலும் 5 வி.வி.பேட் இயந்திரங்களில் உள்ள பதிவு சீட்டுகளை மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களில் பதிவாகியுள்ள எண்ணிக்கையுடன் சரிபார்ப்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் ஐந்து மணி நேரம் தாமதம் ஏற்படும் - தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கருத்து கொண்டோரை தமிழக அரசு துன்புறுத்துவது ஏன்?- தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி
  • BREAKING-NEWS வேலூர், தருமபுரி, சேலம் உள்ளிட்ட உள்தமிழகத்தின் ஒருசில இடங்களில் அனல் காற்று வீசும்- சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான வழக்கை முடித்து வைத்தது தேசிய மனித உரிமைகள் ஆணையம்
  • BREAKING-NEWS 10 மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நடத்தவிருந்த ஆலோசனை ரத்து
  • BREAKING-NEWS காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் நாளை கூடுகிறது; காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 28ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு தடையா ? பிசிசிஐ எடுக்கவுள்ள முக்கிய முடிவு

ness-wadia-s-sentencing-in-drug-case-may-lead-to-kxip-s-ipl-suspension

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரும், தொழிலதிபருமான நெஸ் வாடியா சிறை தண்டனை விதிக்கப் பெற்ற விவகாரம் தொடர்பாக பிசிசிஐ அமைப்பின் கிரிக்கெட் நிர்வாகக் குழு (சிஓஏ) மும்பையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளது. இதனையடுத்து கிங்ஸ் லெவன் அணி ஐபிஎல் போட்டியில் விளையாட தடை விதிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியானது.

Image result for kings xi punjab

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா அண்மையில் ஜப்பானுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது ஜப்பான் விமான நிலையத்தில் 25 கிராம் போதைப் பொருளுடன் அதிகாரிகளிடம் பிடிபட்டார் நெஸ் வாடியா. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரது மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்த நீதிமன்றம் தண்டனையை 5 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 

Related image

ஐபிஎல் நடத்தை விதிகளின்படி, அணி நிர்வாகத்துடன் தொடர்புடைய எந்த நபர்களும் அணியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட அணிக்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.
இதற்கு முன்பு ஸ்பாட்ஃபிக்ஸிங் புகாரில் சிக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சிஓஏ ஆலோசனை நடத்தவுள்ளது.

Image result for ness wadia and preity zinta pics

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தற்போது ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் 7 ஆவது இடத்தில் இருக்கிறது. ஆனால் அந்த அணிக்கும் ப்ளே ஆஃப் சுற்றில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நெஸ் வாடியாவின் கைது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கிங்ஸ் லெவன் அணியின் மற்றொரு உரிமையாளர் திரைப்பட நடிகை ப்ரீத்தி ஜிந்தா. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ப்ரீத்தி ஜிந்தாவும் - நெஸ் வாடியாவும் காதராக இருந்தனர். சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்த நிலையில், நெஸ் வாடியா மீது ப்ரீத்தி ஜிந்தா பாலியல் தொந்தரவு புகாரளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close