[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்கிம்மர் கருவி மூலம் சென்னை ஏடிஎம்களில் திருட்டு - பல்கேரிய கும்பல் கைது
  • BREAKING-NEWS சிகிச்சைக்குப் பின் ‘மாட்டிறைச்சி சர்ச்சை இளைஞர்’ முகமது பைசான் கைது
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளிலிருந்து காவிரிக்கு விநாடிக்கு 8,300 கன அடி நீர் திறப்பு

“‘தல’ன்னு செல்லப் பெயர் கிடைச்சது நிஜமாகவே ஸ்பெஷல்”-தோனி

nick-name-always-special-for-me-dhoni

‘தல’ன்னு செல்லப் பெயர் கிடைச்சது நிஜமாகவே ஸ்பெஷல்தான் என தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கெனவே அடுத்த சுற்றிற்கான வாய்ப்பை உறுதி செய்துவிட்ட சென்னை அணி, நேற்றைய வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலிலும் முதலிடத்திற்கும் முன்னேறியுள்ளது.

சென்னை அணியின் நேற்றைய வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் கேப்டன் தோனி தான். 22 பந்துகளை சந்தித்த தோனி 3 சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பேட்டிங் மட்டுமில்லாமல் ஸ்டெம்பிங்கிலும் தோனியின் கைவீச்சு அனைவரையும் மிரளச் செய்தது. நேற்றைய ஆட்டத்தில், தோனியின் மூன்று மின்னல் வேக ஸ்டெம்பிங் எதிர் அணியை திக்குமுக்காடச் செய்தது. போட்டியின்போது தோனி ஏதாவது செய்தாலே தல தல என சென்னை ரசிகர்கள் உற்சாக கோஷமிடுவது வழக்கம்.

இந்நிலையில் சென்னையில் போட்டிக்கு பின் பேசிய தோனி, “ ‘தல’ன்னு இவ்வளவு பெரிய செல்லப் பெயர் கிடைச்சது நிஜமாகவே ஸ்பெஷ்ல்தான். ஐபிஎல் போட்டியில் சென்னைக்காக உருவாக்கப்பட்ட பாடலில்தான் ‘தல’ங்கிற வார்த்தை இருந்தது. அப்போதெல்லாம் இந்த பெயர் இவ்வளவு தூரம் ரீச் ஆகும்னு நினைக்கல. நான் இப்போது எங்கு போனாலும் என்னை ‘தல’ ‘தல’ன்னே எல்லோரும் கூப்டுறாங்க. உண்மையில் அது ரொம்ப ஸ்பெஷல். வித்தியாசமான உணர்வு. அப்போது ஒட்டுமொத்த சிஸ்கே ரசிகர்களின் உணர்வை உணர்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close