[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS தமிழகத்தின் ஒப்புதலின்றி மேகதாதுதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளோம் - முதல்வர் பழனிசாமி

"ஹிட்மேன்" ரோகித் சர்மாவுக்கு இன்று பிறந்தநாள் ! டாப் 20 தகவல்கள்

rohit-sharma-celebrates-32nd-birthday-today-top-20-facts-of-hit-man-to-know

இந்திய அணியின் ஹிட் மேன் ரோகித் சர்மாவுக்கு இன்று 32 வது பிறந்தநாள். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக ரோகித் சர்மா திகழ்ந்து வருகிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஒருநாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர், ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்(264) அடித்த வீரர் என்ற பல்வேறு சாதனைகளையும் தன் வசம் வைத்துள்ளார். கோலி ஓய்வில் இருந்தால் இந்திய அணிக்கு கேப்டன் பொறுப்பையும் ஏற்று பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார். ரோகித் சர்மாவின் கிரிக்கெட் சாதனைகளை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், அதை தவிர ஹிட்மேன் குறித்த சில கூடுதல் தகவல்களையும் இப்போது தெரிந்துக்கொள்ளலாம்.

1.ரோகித்தின் தாய் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவர் சற்றே தெலுங்கு பேசுவார்

2. ஒரு முறை வீரேந்திர சேவாக்கை பார்ப்பதற்காக பள்ளியை கட் அடித்துவிட்டு சென்றார்

3. ரோகித் ஒரு சைவர். இருப்பினும் முட்டைகள் அதிகம் சாப்பிடுவார். ஆனால் வீட்டில் முட்டை சாப்பிட மாட்டார்.

4. ஒரு சமயம் நண்பர் வைத்த போட்டியில் 45 முட்டைகளை ரோகித் சாப்பிட்டார்

5. ரோகித் ஒரு ஞாபக மறதிக்காரர். ஹோட்டல், விமானங்களில் அடிக்கடி தனது பொருட்களை மறந்து வைத்துவிடுவார்.

6.ஒரு முறை தனது திருமண மோதிரத்தையே ஹோட்டலில் மறந்து சென்றுவிட்டார்.

7. ஒருமுறை விராட் கோலி கூறுகையில், ‘ரோகித் ஒரு தூக்க பிரியர்’ என்றார்.

8. 6 ஆண்டுகள் காதலித்து ரித்திகாவை 2015 டிசம்பர் 13ல் கரம்பிடித்தார்

9. ரித்திகா ஒரு விளையாட்டு நிறுவன மேனேஜர். ரோகித் சர்மாவும் அவரது வாடிக்கையாளராக இருந்தார்.

10. ரோகித் ரியல் மேட்ரிட் கால்பந்து அணியின் ஆதரவாளர்

11. ரோகித்தின் ஜெர்சி எண் 45. 

12. ரோகித் சர்மா பீட்டா அமைப்பில் ஒரு உறுப்பினராக உள்ளார்

13. ரெய்னாவுக்கு அடுத்து இராண்டாவது பேட்ஸ்மேனாக மூன்று வகையான போட்டிகளிலும் சதம் அடித்துள்ளார் 

14. ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரிகள் அடித்தவர். பவுண்டரிகள் மூலம் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் அடித்தவர். ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்

15. பெர்த் நகரில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ரோகித்

16. டெஸ்டில் அறிமுகமான அடுத்தடுத்த போட்டியில் செஞ்சுரி அடித்த மூன்றாவது இந்தியர்

17. ரோகித் சர்மாவுக்கு 2015-ல் அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.  

18. ஐபிஎல் போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற கேப்டன்

19. டி20 போட்டிகளில் இந்தியாவிற்காக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்

20. 2017-ல் இலங்கை சுற்றுப் பயணத்தில் ஒருநாள், டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு வெற்றியை தேடித் தந்தார்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close