[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோழிப்பண்ணை உரிமையாளர்கள் சோளத்தை வரியின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும்- பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் வரும் 18ம் தேதி காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா ஹிமாச்சல பிரதேசத்தின் புதிய ஆளுநராக நியமனம் . ஹிமாச்சல் ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிடமாற்றம்
  • BREAKING-NEWS ‘பெருங்களத்தூர் டூ சிங்கப்பெருமாள் கோவில்- 8 வழிச்சாலை’ : முதல்வர் அறிவிப்பு
  • BREAKING-NEWS தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதாவுக்கு மக்களவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது

ஸ்டம்பை தாக்கிய ரோகித் சர்மாவுக்கு அபராதம்

rohit-sharma-fined-for-breach-of-conduct

கொல்கத்தாவுக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், ஸ்டம்பை தாக்கிய மும்பை இண்டியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், மும்பை இண்டியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று மோதின. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, சுப்மான் கில், கிறிஸ் லின் மற்றும் ஆண்ட்ரூ ரசலின் அதிரடி ஆட்டத்தால் 232 ரன்களை எடுத்தது. நடப்பு தொடரில் ஒரு அணியின் அதிக பட்ச ஸ்கோர் இது.

இதையடுத்து 233 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இருப்பினும் அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் ஹர்திக் பாண்டியா 34 பந்துகளில் 91 ரன்களை எடுத்து மிரட்டினார். இறுதியில் அந்த அணி 198 ரன்களை மட்டுமே எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா, எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது ரிவியூ கேட்கப்பட்டது. பின்னர் நடுவர் முடிவுக்கு விடப்பட்டது. நடுவர் அவுட் என்று அறிவித்ததும், அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா, நடுவரின் அருகில் இருந்த ஸ்டம்பை, பேட்டால் இடித்தார். இது நடத்தை விதிகளுக்கு எதிரானது என்பதால் போட்டி கட்டணத்தில் அவருக்கு 15 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close