[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆங்கிலப் புத்தாண்டில் இந்து கோயில்களை திறக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

அர்ஜூனா விருதுக்கு 4 கிரிக்கெட் வீரர்கள் பரிந்துரை

the-bcci-recommended-4-players-for-the-arjuna-award

அர்ஜூனா விருது வழங்க முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா, பும்ரா மற்றும் பூனம் யாதவ் ஆகிய 4 கிரிக்கெட் வீரர்களின் பெயரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது. 

விளையாட்டுத்துறையில் சிறப்பாக செயல்படும் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி கௌரவிக்கிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டிற்கான அர்ஜூனா விருதுக்கு நான்கு இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை பிசிசிஐ பரிந்துரைத்துள்ளது. அதில் முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா, பும்ரா மற்றும் பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்தது. 

Related image
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக முகமது ஷமியும் பும்ராவும் செயல்பட்டு வருகின்றனர். ரவிந்திர ஜடேஜா ஆல் ரவுண்டராக செயல்பட்டு வருகிறார். மேலும் இவர்கள் மூவரும் 2019ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close