[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

தினேஷ் கார்த்திக் 97 ரன் விளாசல் - கொல்கத்தா அணி 175 ரன் குவிப்பு

ipl-2019-kolkata-knight-riders-175-6-in-20-overs-against-rajasthan-royals-dinesh-karthik-97

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக்கின் அதிரடியான ஆட்டத்தால் கொல்கத்தா 175 ரன் குவித்துள்ளது.

 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில் லின், சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரை ஆரோன் வீசினார். முதல் 3 பந்துகளை சந்தித்த லின் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். 5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட் இழப்புக்கு 31 ரன் எடுத்தது. சுப்மன் கில் 14 ரன்னில் ஆரோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

       

பின்னர் வந்த ரானா 21, சுனில் நரைன் 11 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி பவுண்டரிகள் விளாசினார். அதிரடியாக விளையாடி வரும் ரஸல் 14 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவர் கை வலியால் மிகவும் அவதிப்பட்டார். 

ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் தினேஷ் கார்த்திக் தன்னுடைய அதிரடியை தொடர்ந்து அரைசதம் அடித்தார். பிராத்வெயிட் 5 ரன்னில் அவுட் ஆனார். இறுதியில் தினேஷ் கார்த்திக் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அவர் 50 பந்துகளில் 97 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவர் மொத்தம் 9 சிக்ஸர், 7 பவுண்டரி விளாசினார். 

               

கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆரோன் இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close