[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீங்கள் வெற்றிபெற்ற மாநிலங்களை விட தமிழகத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்- மோடிக்கு கமல்ஹாசன் கோரிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 74.10 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.24 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS தமிழகம் தனித்தன்மையுடன் விளங்குகிறது என்பதையே திமுக பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பெரம்பலூர் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் 6,83,697 வாக்குகள் பெற்று வெற்றி
  • BREAKING-NEWS களத்தில் இறங்கியபோது உறுதியளித்தபடி தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது; திமுகவின் வெற்றிக்கு உழைத்த தொண்டர்களுக்கு நன்றி -மு.க. ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளிவந்துள்ளது; இரண்டு தேர்தல்களிலும் நாம் எதிர்பார்த்த பெரிய வெற்றியை பெற்று தந்துள்ள மக்களுக்கு நன்றி - ஸ்டாலின்
  • BREAKING-NEWS பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்; மோடி அரசு ஜனநாயக கொள்கைகளை காக்கும் என நம்புகிறேன் - மு.க.ஸ்டாலின்

ரகானேவுக்கு பதில் ஸ்மித் கேப்டன் - பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா ராஜஸ்தான்?

rajasthan-royals-have-won-the-toss-and-they-ll-bowl-first

தொடரில் மும்பை இண்டியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஜெய்ப்பூர் நகரில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச தீர்மானித்துள்ளது. இதனையடுத்து, மும்பை அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ராஜஸ்தான் அணிக்கு ரகானேவுக்கு பதில் ஸ்மித் கேப்டனாக செயல்படுகிறார். மீதமுள்ள போட்டிகளில் அவர்தான் கேப்டனாக தொடர்வார். தொடர் தோல்வியை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.     

 
 

ராஜஸ்தான் அணியில் ஜோஸ் பட்லர் இடம்பெறவில்லை. குழந்தை பிறந்துள்ளதால் அவர் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.  பட்லர், சோதி, திரிபாதிக்கு பதிலாக ஸ்மித், ஸ்டோக்ஸ் மற்றும் ரியான் பராக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மும்பை அணியில் ஜெயந்த் யாதவுக்கு பதில் மயங்க் மார்கண்டே களமிறங்குகிறார்.

மும்பை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6இல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9இல் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று தன்னுடைய பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க அந்த அணி முயற்சிக்கும். 

          

மும்பை அணியில் டிகாக், ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்டு என பேட்டிங் வரிசை பலமானதாக உள்ளது. பந்துவீச்சிலும் பும்ரா, மல்லிங்கா உள்ளிட்டோர் பலமாக உள்ளனர். அதனைத் தொடர் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் அந்த அணி விளையாடும் எனத் தெரிகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close