[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

பாண்ட்யா விளாசலில் வென்றது மும்பை: கேள்விக்குறியானது பெங்களூரின் அடுத்த சுற்று!

lasith-malinga-and-hardik-pandya-hand-rcb-their-seventh-defeat

பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் லீக் போட்டியில் மும்பை அணி, வெற்றி பெற்றது. இதையடுத்து 7 வது தோல்வியைச் சந்தித்துள்ள பெங்களூரு அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

ஐபிஎல் தொடரின் 31வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகள் நேற்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில், கேப்டன் கோலி 8 (9) ரன்களிலேயே வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பார்த்திவ் படேல் மற்றும் டி வில்லியர்ஸ் ஜோடி வேகமாக ரன்களை சேர்த்தனர்.

பார்திவ் படேல் 28 (20) ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த மொயின் அலி ஆரம்பம் முதலே அதிரடியை காட்ட, மறுபுறம் வில்லியர்ஸும் வெளுத்து வாங்கினார். இருவரும் அரை சதம் அடித்தனர். அலி 50 (32) ரன்களில் அவுட் ஆனார். இறுதி ஓவரில், டி வில்லியர்ஸ் 75 (51) ரன்களில் ரன் அவுட் ஆனார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் மலிங்கா 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

பின்னர் 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 19 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


ரோகித் சர்மா 28, டி காக் 40, இஷான் கிஷன் 21, சூர்யகுமார் யாதவ் 29 , குணால் பாண்ட்யா 11 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா, அதிரடியாக 16 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 37 ரன் குவித்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பெங்களூரு அணி தரப்பில் சாஹல், மொயீன் அலி தலா 2 விக்கெட்டும், முகமது சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

மும்பை வீரர் மலிங்கா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

8 போட்டியில் விளையாடியுள்ள மும்பை அணிக்கு இது 5-வது வெற்றி. பெங்களூரு அணிக்கு 7-வது தோல்வி. இந்த தோல்வியின் மூலம் பெங்களூரு அணியின் ‘பிளே-ஆப்’ சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி இருக்கிறது.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close