[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பதிலடியாக இலங்கை தேவாலயங்கள் மீது தாக்குதல் - ஆரம்பகட்ட விசாரணையில் தாக்குதலுக்கான காரணம் தெரிந்ததாக இலங்கை பாதுகாப்பு துணை அமைச்சர் தகவல்

டாஸ் வென்றது சென்னை - கொல்கத்தா முதல் பேட்டிங்

csk-won-the-toss-and-elected-to-bat-first

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

ஐபிஎல் தொடரின் 29வது போட்டி இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இடையே நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் சென்னை அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சென்னை அணி விளையாடியுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளை வென்று புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கொல்கத்தா அணி 7 போட்டிகளில் 4 போட்டிகளை வென்று 2வது இடத்தில் உள்ளது. எனவே இந்தப் போட்டியை கொல்கத்தா அணி வென்றாலும் பட்டியலில் முதலிடம் பிடிக்க முடியாது. 

இருப்பினும் கடந்த போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியை எளிமையாக வீழ்த்தியதால், இந்தப் போட்டியில் கொல்கத்தா பதிலடி கொடுக்க முயற்சிக்கும் எனத் தெரிகிறது. அத்துடன் கடந்த போட்டி சென்னையில் நடைபெற்றதால் சிஎஸ்கே எளிதாக வென்றது. ஆனால் இந்த முறை கொல்கத்தாவின் சொந்த மண்ணில் போட்டி நடப்பதால் அந்த அணி சற்று பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொல்கத்தா மைதானம் பேட்டிங் பிட்ச் என்பதால் இன்று ராபின் உத்தப்பா, ரானா, வாட்சன் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close