[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

மும்பையை வீழ்த்துமா ராஜஸ்தான் ? மீண்டும் வந்தார் ரோகித் சர்மா

ipl-2019-rr-won-the-toss-and-elects-to-bowl-against-mi

மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறு லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தேர்வு செய்துள்ளது. 

மும்பை அணியை பொருத்தவரை கடந்த போட்டியில் விளையாடாத கேப்டன் ரோகித் ஷர்மா இந்தப் போட்டியில் களமிறங்குகிறார். மும்பை அணி கடந்த போட்டியில் தனது சிறப்பான ஆட்டத்தால் கடினமான இலக்கை சேஸ் செய்து வெற்றி பெற்றது. எப்போதுமே தொடக்கத்தில் சொதப்பும் மும்பை அணி இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தி வருகிறது. 

ராஜஸ்தான் அணி இந்த ஐபிஎல் தொடரில் சற்று சொதப்பி வருகிறது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி  பெற்றுள்ளது. அந்த அணியில் ரஹானே பட்லர் மட்டும் ஒரளவு சிறப்பாக விளையாடி வருகின்றனர். மற்ற வீரர்கள் சரியாக விளையாடவில்லை. அதனால் இந்த அணி சற்று தவித்து வருகின்றனர். 

இந்த இரு அணிகளும் இதுவரை 21 போட்டிகளில் விளையாடி உள்ளனர். அதில் மும்பை 11 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி மும்பை அணிக்கு 200ஆவது டி20 போட்டி என்பதால் மும்பை அணி இதில் வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close