[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

கே.எல்.ராகுல் சதம் வீண்: பொல்லார்ட் விளாசலில் மும்பை த்ரில் வெற்றி!

kieron-pollard-s-83-off-31-seals-unlikely-mumbai-indians-win

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 24வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் நேற்று மோதின. மும்பையில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. தசை பிடிப்பு காரணமாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக பொல்லார்ட் தற்காலிக கேப்டன் ஆனார்.  

முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல் மற்றும் கிறிஸ் கெய்ல் ஆகியோர், விளாசித் தள்ளினர். அணியின் ஸ்கோர் 116 ரன்னாக இருந்தபோது கெயில் 63 (36) ரன்னில் ஆட்டமிழந்தார். அவருடன் ஜோடி சேர்ந்து அரை சதத்தை கடந்த கே.எல்.ராகுல் தொடர்ந்து விளாசினார். 

ஆனால், மறுபுறம் டேவிட் மில்லர் 7 (8), கருண் நாயர் 5 (6), சாம் கர்ரன் 8 (3) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கே.எல்.ராகுல் 62 பந்துகளில் சதம் விளாசினார். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. 

பின்னர் களமிறங்கிய மும்பை அணி, வீரர்கள் டி காக் (24) சித்தேஷ் லாட் (15), சூர்ய குமார் யாதவ் (21), இஷான் கிஷான் (7), ஹர்திக் பாண்ட்யா (19), குணால் பாண்ட்யா (1) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுபுறம் எந்தவித கருணையும் இன்றி, விளாசலில் ஈடுபட்டார் பொல் லார்ட். அவர் லேசாகத் தொட்டால் கூட பந்து சிக்சருக்குப் பறந்தது. குறிப்பாக சாம் கர்ரன் பந்தை விளாசித் தள்ளினார். 4 ஓவர்களில் 54 ரன்களை விட்டுக்கொடுத்தார் சாம் கர்ரன்.

பின்னர், 31 பந்தில் 10 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 83 ரன் எடுத்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார் பொல்லார்ட். அப்போது அணியின் ஸ்கோர் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்திருந்தது. இதனால் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. அல்ஜாரி ஜோசப்பும் ராகுல் சாஹரும் களத்தில் இருந்த னர். கடைசி பந்தில் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது. அதை எளிதாக அடித்தார் ஜோசப். இதையடுத்து 198 ரன் எடுத்து மும்பை அணி த்ரில் வெற்றி பெற்றது. பஞ்சாப் அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டும் ராஜ்புத், அஸ்வின், சாம் கர்ரன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணிக்கு இது 4 வது வெற்றியாகும். ஏழு போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப்புக்கு இது 3 வது தோல்வி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close