[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 8 காசுகள் உயர்ந்து ரூ.70.45க்கு விற்பனையாகிறது
  • BREAKING-NEWS சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 14 காசுகள் உயர்ந்து ரூ.74.39க்கு விற்பனையாகிறது

‘இது எங்களுக்கு பழகிப் போச்சு’ - விமான நிலையத்தில் படுத்துறங்கிய தோனி, சாக்‌ஷி

ipl-2019-ms-dhoni-sakshi-dhoni-sleep-on-airport-floor-share-picture-on-instagram

விமான நிலையத்தின் காத்திருப்பு அறையில் தோனியும், அவரது மனைவியும் தரையில் படுத்திருப்பது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 5இல் வெற்றிப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்திலுள்ளது. சென்னை அணி தன்னுடைய அடுத்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஜெய்ப்பூர் நகரில் இந்தப் போட்டி வருகின்ற ஏப்ரல் 11ம் தேதி நடைபெறுகிறது.

                     

நேற்று போட்டி முடிந்ததும் சென்னை வீரர்கள் ஜெய்ப்பூருக்கு கிளம்பினர். சென்னை விமான நிலையம் சென்ற அவர்கள், தங்களுடைய விமானத்திற்காக நீண்ட காத்திருந்தனர். அந்த நேரத்தில் தோனியும், அவரது மனைவி சாக்‌ஷியும் விமான நிலையத்தின் காத்திருப்பு அறையிலே, அதுவும் தரையிலே படுத்து உறங்கிவிட்டனர். இருவரும் தரையில் படுத்து உறங்குவதை வீரர் ஒருவர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்நிலையில், இன்று காலை தோனி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் தானும், தன்னுடைய மனைவியும் உறங்குவது போன்ற அந்தப் படத்தை பதிவிட்டுள்ளார்.  ‘ஐபிஎல் போட்டிகளுக்கான நேரம் பழகிப் போனதால், காலை நேரங்களில் விமானத்தில் செல்லும் போதெல்லாம் இது வழக்கமாகவே நடைபெற்று வருகிறது’ என்றும் தோனி குறிப்பிட்டுள்ளார். 

                       

இந்தப் படத்தை தோனியின் ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஐபிஎல் போட்டிகளில், மைதானங்கள் மிதமானதாக இருப்பதால் போட்டியின் நேரம் நீள்கிறது. அதனால், வீரர்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்படுகிறது.

                      

அதேபோல், நேற்றைய போட்டியின் போது எடுக்கப்பட்ட மற்றொரு படமும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. தோனியும், கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கானும் ஒரே பிரேமில் வருவது போன்றது படம்தான் அது. அதேபோல், நேற்றைய போட்டியை காண இயக்குநர் அட்லி, தனுஷ் உள்ளிட்டோர் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

                    

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close