[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.சி.சண்முகம், கதிர் ஆனந்த் வேட்புமனுக்கள் நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS திரிணாமுல், சிபிஐ, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
  • BREAKING-NEWS இன்ஸ்டாகிராம் குறைபாட்டை கண்டுபிடித்த இளைஞருக்கு 20 லட்சம் பரிசு
  • BREAKING-NEWS நெக்ஸ்ட் தேர்வுக்கு எதிர்ப்பு - திமுக, காங். எம்பிக்கள் ஆர்பாட்டம்
  • BREAKING-NEWS கார் விபத்து: டிவி நடிகை உடல் நசுங்கி பலி!
  • BREAKING-NEWS இரண்டாவது நாளாக கர்நாடக சட்டசபை இன்று தொடங்கியது

''சென்னை ரசிகர்கள் என்னை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர்'' - நெகிழ்ந்த தல ‘தோனி’

it-s-a-special-connection-with-chennai-fans-says-dhoni

தனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது என சிஎஸ்கே வீரர் தோனி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடரில் வேறு எந்த வீரருக்கும் இல்லாத ரசிகர்கள் கூட்டம் தோனிக்கு இன்றளவும் இருக்கிறார்கள். ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு அளப்பரியது. சென்னை மைதானத்தில் மட்டும் இல்லாமல், செல்லும் இடமெல்லாம் தோனிக்கென்று தனி ரசிகர் கூட்டம் குவிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். 

‘இங்கு நான் வந்திருப்பது தோனி ஒருவருக்காகத்தான்’ என்று மும்பை மைதானத்தில் வயதான மூதாட்டி ஒருவர் பதாகையுடன் நின்ற புகைப்படமே அதற்கு சாட்சி. ரசிகர்கள் மட்டுமின்றி ஐபிஎல்லில் விளையாடும் இந்திய, வெளிநாட்டு வீரர்கள் பலரும் கூட தோனியின் ரசிகர்களாகவே இருக்கிறார்கள்.

சென்னையை பொறுத்தவரை தோனி என்றால் செல்லமாக 'தல'. தோனிக்கும் சென்னை என்றால் விருப்பம். தன்னுடைய இரண்டாவது வீடு சென்னை தான் என்று தோனியே பலமுறை சொல்லி இருக்கிறார். 

இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை-கொல்கத்தா போட்டிக்கு பின் பேசிய தோனியிடம் '' சென்னை ரசிகர்களுக்கும், உங்களுக்கும் இடையேயான உறவு எத்தகையது? என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி ''எனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது. உண்மையிலேயே அவர்கள் என்னை மனதார ஏற்றுக்கொண்டுள்ளனர்'' என்று நெகிழ்ச்சியாக தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close