[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

“முதலில் கோபம்.. கடைசியில் கட்டிப்பிடித்து வாழ்த்து” - தோனி குறித்து நெகிழும் சாஹர் 

dhoni-bhai-was-very-angry-with-me-but-after-the-match-he-hugged-me-and-said-well-done-deepak-chahar

தோனி என் மீது மிகவும் கோபமாக இருந்தார். நான் செய்தது மிகப்பெரிய தவறு. அவர் என்னிடம் நிறைய விஷயங்கள் சொன்னார். உண்மையில், எப்படி பந்துவீச வேண்டும் என்று மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் சாஹர் வீசிய இரண்டு ‘நோ பால்கள்’ முக்கியமானது. முதலில் விளையாடிய சென்னை அணி 160 ரன் எடுக்க, பின்னர் அதனை விரட்டி பஞ்சாப் அணி விளையாடியது. கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன் தேவைப்பட்டது. சென்னை அணி வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புகள் இருந்தது. 

                

19வது ஓவரை சாஹர் வீசினார். முதல் பந்தே ‘நோ பால்’. பந்து கையை விட்டு நழுவியது. அந்தப் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. அதனால், 5 ரன்கள் பஞ்சாப் அணிக்கு சேர்ந்தது. ப்ரீ ஹிட் வேறு கிடைத்தது. ஆனால், அடுத்த பந்தினையும் ‘நோ’ பந்தாக போட்டார். அந்தப் பந்திலும் இரண்டு ரன் அடிக்கப்பட்டது. மீண்டும் ப்ரீ ஹிட். ஆக மொத்தம் பந்தே வீசப்படாமல் 8 ரன் வாரி வழங்கினார். இப்பொழுது, இரண்டு ஓவர்களில் 31 ரன் என்ற நிலைக்கு வந்துவிட்டது. அதனால், சென்னை வீரர்கள் டென்ஷன் ஆகிவிட்டனர். 

               

டென்ஷன் ஆன தோனி, நேராக சாஹரிடம் வந்தார். கையை நீட்டி பேசி ஏதேதோ ஆலோசனைகளை கூறினார். அப்போது சாஹர் மிகவும் பரிதாபமாக இருந்தார். எப்படியோ, அடுத்த 6 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் சாய்த்தார். இது சென்னை அணியின் வெற்றிக்கு உதவியாக இருந்தது. தோனி, சாஹரிடம் பேசுவது போன்ற படம் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது.

இந்நிலையில், டைம் ஆப் இந்தியாவிற்கு சாஹர் அளித்த பேட்டியில் ‘நோ பால்’ போட்ட தன்னுடைய அனுபவம் குறித்து பேசியுள்ளார். அப்போது, “போட்டி முடிந்த பின்னர், ஒவ்வொரு வீரரும் என்னிடம் வந்து வாழ்த்து தெரிவித்தனர். டெத் ஓவரில் பந்துவீச்சு சிறப்பாக இருந்ததாக கூறினர். தோனியும் என்னிடம் வந்தார். என்னை பார்த்து சிரித்தார், கட்டிப்பிடித்து சிறப்பாக பந்துவீசியதாக பாராட்டினார்.

நான் இரண்டு மோசமான டெலிவரி செய்துவிட்டேன், ஆனால், உடனடியாக மீண்டுவிட்டேன். தோனியும் என்னை உற்சாகப்படுத்தினார். சிறப்பாக பந்துவீசுமாறு வலியுறுத்தினார். அணியின் வெற்றிக்காக பங்களிப்பு செலுத்தியதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. 

                           

முதலில் மெதுவாக பந்துவீச முயற்சித்தேன். ஆனால், பந்து என்னுடைய கையைவிட்டு சென்றுவிட்டது. அந்தப் பந்தில் பவுண்டரி அடிக்கப்பட்டது. மீண்டும் அதேபோல், முயற்சித்தேன், ஆனால், அதேதான் நடந்தது. உடனடியாக தவறினை திரித்துக் கொண்டு பந்துவீசினேன். அந்தத் தவறை திரும்பவும் செய்யவேயில்லை. 

                

கடந்த முறை சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. அந்த அணியில் நான் இருந்ததை நினைத்து பெருமை கொண்டேன். இந்த வருடம் நாங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த வருடம் கோப்பையை தக்க வைத்து கொள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. என்னால் முடிந்த அளவிற்கு சிஎஸ்கேவிற்கு பங்களிப்பை செலுத்துவேன். நிறைய விக்கெட் எடுக்க வேண்டும். டெத் ஓவரில் சிறப்பாக செயல்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close