[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

ரேசுக்கு மீண்டும் அழைத்த வாட்சன் மகன்; நோ சொல்லி தப்பித்த கேப்டன் கூல்!

ms-dhoni-races-shane-watson-and-imran-tahir-s-sons-after-csk-s-win-over-kxip

இந்திய அணியைப் பொறுத்தவரை அதிக ரசிகர் பட்டாளம் கொண்டவர் தோனி. இந்தியாவைத் தாண்டி உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உண்டு. ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்காக இவர் விளையாடுவதால், தமிழகத்தில் இவருக்கு கூடுதலான ரசிகர்கள் இருக்கிறார்கள். கேப்டன் கூல், மஹி, எம்எஸ்டி என்று நிறைய செல்லப்பெயர்கள் இருந்தாலும் தமிழகத்தை பொருத்தவரை தோனியின் செல்லப்பெயர்  'தல'. 

அவ்வப்போது செல்ஃபி எடுக்க வரும் ரசிகர்களுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டு கலகலப்பை ஏற்படுத்துவார். ஆனால் நேற்று வித்தியாசமான ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டார் தோனி.பஞ்சாப்புக்கு எதிரான நேற்றைய போட்டிக்கு பின்னர் சிஸ்கே வீரர்களான வாட்சன் மற்றும் இம்ரான் தாஹிர் ஆகியோரின் மகன்கள் மைதானத்தில் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டனர். 

என்ன ஓட்டப்பந்தயமா? என அவர்களுடன் களத்தில் இறங்கிய தோனி, அவர்களுடன் சேர்ந்து ஓடத்தொடங்கினார். சிறிது தூரம் சென்று மீண்டும் திரும்புகையில் இம்ரான் தாஹிரின் மகனை கையில் தூக்கிக் கொண்டு ஓடி வந்தார். வாட்சன் மகன் களைத்து போய் பின்னால் ஓடி வந்தார். 

மீண்டும் ரேஸ் வைத்துக் கொள்ள வாட்சனின் மகன் அழைப்பு விடுக்க 'நோ நோ' என சிரித்துக்கொண்டே அந்த இடத்தை விட்டு தோனி ஓட்டம் பிடித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close