[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் வழக்கு
  • BREAKING-NEWS ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது தடியடி- டெல்லியில் விடியவிடிய போராட்டம்
  • BREAKING-NEWS 'இலங்கைத் தமிழர்களை ஏன் ஒதுக்கினீர்கள்' - ப.சிதம்பரம் கேள்வி
  • BREAKING-NEWS ஏ.எம்.யூ. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை: ஜன. 5 வரை கல்லூரி மூடல்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 77.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.81 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்

டெல்லியுடன் இன்று மோதல்: வெல்வாரா ’கேப்டன்’ விராத்?

royal-challengers-bangalore-near-a-point-of-no-return

ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் டெல்லி அணியை விராத் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி எதிர்கொள்கிறது.

பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் மாலை 4 மணிக்கு தொடங்கவுள்ள போட்டியில் இந்த அணிகள் மோதுகின்றன. இதுவரை மோதியுள்ள ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியை கூட காணாத பெங்களூரு அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இதனால் விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. திறமையான பேட்ஸ்மேன்கள் இருந்தும் அந்த அணி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவது கவலையளிக்கிறது என்கிறார்கள்.

கொல்கத்தாவுக்கு எதிராக நடந்த, முந்தைய போட்டியில் 200 ரன்னுக்கு மேல் குவித்தும் பெங்களூரு அணியால் வெற்றி பெற முடியவில்லை. அதற்கு பந்துவீச்சாளர் களைக் குறை சொன்ன கேப்டன் விராத் கோலி, இன்னும் சரியான கலவையில் அணி அமையவில்லை என்பதையும் ஒப்புக்கொண்டார். வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஹெட்மையர், தென்னாப்பிரிக்காவின் டிவில்லியர்ஸ், ஆஸ்திரேலியாவின் ஸ்டோயினிஸ், இங்கிலாந்தின் மொயின் அலி, நியூசிலாந்தில் டிம் சவுதி உட்பட திறமையான வீரர்கள் இருந்தும் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

பந்துவீச்சில் சாஹல் மட்டுமே தன் பங்களிப்பை சிறப்பாகச் செய்துவருகிறார். ஆட்களை மாற்றி மாற்றி பார்த்தும் எந்த பந்துவீச்சாளரும் ரன்களை அள்ளிக்கொடுப் பதை நிறுத்தவில்லை.

உலகப் புகழ்பெற்ற பேட்ஸ்மேன் விராத் கோலி, திறமையான கேப்டன் இல்லை என்றும் அவர் பெங்களூரு அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதை ஆமோதிக்கும் விதமாக, ‘பேட்ஸ்மேனாக விராத் மாஸ்டர். கேப்டனாக அவர் அப்ரன்டிஸாகத் தான் இருக்கிறார்’ என்று கூறியுள்ளார் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர். அதில் அவர் இன்னும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அட்வைஸ் செய்திருக்கிறார்.

இந்நிலையில் இன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சந்திக்கிறது பெங்களூரு அணி. இந்தப் போட்டியிலாவது அந்த அணி, முதல் வெற்றியை பதிவு செய்யுமா என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். டெல்லி அணியில் பிருத்வி ஷா, தவான், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பன்ட், இங்ராம் உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன் கள் இருக்கின்றனர்.

பந்துவீச்சில் ரபாடா மிரட்டி வருகிறார். அதனால் இன்றைய போட்டியும், பெங்களூரு அணிக்கு சவாலாகவே இருக்கும் என்று தெரிகிறது.  இரு அணிகளும் இதுவரை 21 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் 14 போட்டிகளில் பெங்களூரும் 6 போட்டிகளில் டெல்லி அணியும் வென்றுள்ளன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close