[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

“எவ்ளோ டென்ஷன் இருந்தாலும் வழிநடத்துவார்” - ‘கேப்டன் கூல்’னா சும்மாவா...!

dhoni-just-showed-why-is-the-best-in-the-game-by-showing-faith-in-deepak-chahar-when-he-just-bowled-2-regular-no-balls

ஐபிஎல் தொடரில் வேறு எந்த வீரருக்கும் இல்லாத ரசிகர்கள் ஏன் தோனிக்கு இன்றளவும் இருக்கிறார்கள். ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு அளப்பரியது. சென்னை மைதானத்தில் மட்டும் இல்லாமல், செல்லும் இடமெல்லாம் தோனிக்கென்று தனி ரசிகர் கூட்டம் குவிந்து கொண்டுதான் இருக்கிறார்கள். ‘இங்கு நான் வந்திருப்பது தோனி ஒருவருக்காகத்தான்’ என்று மும்பை மைதானத்தில் வயதான மூதாட்டி ஒருவர் பதாகையுடன் இருந்தார். இத்தனை அன்பிற்கும் பங்கம் வராமல் தன்னுடைய திறமையை தோனி தொடர்ந்து நிரூபித்து வருகிறார். இன்றைய போட்டியிலும் அதனை சிறப்பாக செய்துள்ளார். 

          

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தலான வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணி அடித்தது 160 ரன்கள். இருப்பினும், கச்சிதமான பந்துவீச்சால் பஞ்சாப் அணியை 138 ரன்களுக்கு சிஎஸ்கே கட்டுப்படுத்தியது. கடந்த சில போட்டிகளில் பீல்டிங்கில் சென்னை அணி சொதப்பி வந்தது. ஆனால், இன்றைய போட்டியில் பீல்டிங் சிறப்பாகவே இருந்தது. அதேபோல், போட்டி வெற்றி பெற சிஎஸ்கேவின் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியமான காரணமாக இருந்தார்கள். 

          

எல்லாம் இருப்பினும், தோனியின் பங்களிப்பு இந்தப் போட்டியில் முக்கியமானது. போட்டி முடிந்த பின்னர், ட்விட்டர் கமெண்ட்டில் ஒருவர், ‘கேப்டனுக்கும் மேன் ஆஃப் தி மேட்ச்’ இருந்தால் அது தோனிக்குதான் கிடைத்திருக்கும் என்று குறிப்பிட்டிருந்தார். ஆம், தோனியின் அனுபவமிக்க கேப்டன்ஷிப் வீரர்களுக்கு உதவியாக இருந்தது.

தொடக்கத்தில் இரண்டு விக்கெட் வீழ்ந்துவிட்டாலும், கே.எல்.ராகுல், சர்பராஸ் கானின் பார்ட்னர்ஷிப் ஆட்டத்தை பஞ்சாப் பக்கம் கொண்டு சென்றது. இருவரும் அரைசதம் அடித்து, 100 ரன்களுக்கு மேல் அடித்தனர். இருப்பினும் நம்பிக்கை தளராமல் தோனி இருந்தார். 

                

வழக்கமாக தோனி சுழற்பந்து வீச்சாளர்களுக்குதான் அதிக ஆலோசனை கூறி வழி நடத்துவார் என்று கூறுவர். ஆனால், இன்றைய போட்டியில் டெத் ஓவரில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அற்புதமாக ஆலோசனை கூறி ஆட்டத்தை கட்டுக்குள்  கொண்டு வந்தார். கடைசி இரண்டு ஓவர்களில் 39 ரன்கள் தேவை. 19வது ஓவரை சாஹர் வீசினார்.

முதல் பந்தினையே ‘நோ’ பந்தாக வீசினார். அதில், பவுண்டரியை அடித்தார் சர்பராஸ் கான். பந்து வீசாமலே 5 ரன்கள் வந்துவிட்டது. ப்ரீ ஹிட் வேறு. ப்ரீ ஹிட் பந்தும் ‘நோ’பந்தாக வீசினார். அதில் இரண்டு ரன்கள் அடித்தார். மொத்தம் 3 ரன்கள் கிடைத்தது. ஒரு பந்து கூட வீசப்படவில்லை, ஆனால் 8 ரன்கள் சென்றுவிட்டது. சென்னை ரசிகர்கள் டென்ஷன் ஆகிவிட்டார்கள். ஆட்டமே பரபரப்பாகிவிட்டது. 

             

தோனி நேராக சாஹரிடம் சில நொடிகள் பேசினார். ஆலோசனைகளை வழங்கினார். பதட்டத்தை குறைத்தார். அடுத்த 6 பந்துகளையும் சாஹர் அற்புதமாக வீசினார். 5 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து, மில்லர் விக்கெட்டையும் சாய்த்தார். போட்டி சிஎஸ்கே கைக்கு வந்தது. கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. 3 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுக்கப்பட்டு, ஒரு விக்கெட்டும் எடுக்கப்பட்டது.  

               

பேட்டிங்கில் வழக்கம் போல் சிறப்பான முறையில் பினிஷிங் செய்தார் தோனி. கடைசி கட்டத்தில் அவர் அடித்த 37 ரன்கள் அணிக்கு உறுதுணையாக இருந்தது. சேப்பாக்கம் மைதானத்திற்கு வந்த சிஎஸ்கே ரசிகர்களுக்கு மீண்டும் வெற்றியை பரிசாக அளித்துள்ளார் தோனி.

போட்டோ கேலரி

1 of 12

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close