[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

என்னதான் ஆச்சு சென்னை வீரர்களுக்கு...! மீளுமா பேட்டிங் படை

raina-watson-rayudu-not-in-batting-form-in-csk

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் சென்னை அணி வீரர்கள் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர்.

ஐபிஎல் தொடர்களை பொறுத்தவரை சென்னை அணியின் பேட்டிங் எப்பொழுதுமே பலமாக இருக்கும். கடந்த ஐபிஎல் போட்டியில் தோனி அபாரமாக விளையாடினார். வின்டேஜ் தோனியை பார்க்க முடிந்தது என்று பலரும் கூறினர். அம்பத்தி ராயுடு அபாரமாக விளையாடி 602 ரன்கள் குவித்தார். வாட்சனும் 555 ரன்கள் குவித்து கடந்த ஐபிஎல் போட்டியில் மிரட்டினார். ரெய்னாவும் 445 ரன்கள் அடித்து இருந்தார். 

           

சென்னை அணி என்றாலே தொடக்க வீரர்கள் யாராவது ஒருவர் சிறப்பாக விளையாடுவர். ஆனால், இந்த முறை அம்பத்தி ராயுடு, வாட்சன் ஜோடி முற்றிலும் சொதப்பிவிட்டது. குறிப்பாக, ராயுடு 4 போட்டிகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்தார். வாட்சன் ஒரே ஒரு போட்டியில் மட்டும் 44 ரன்கள் எடுத்தார். மற்ற போட்டிகளில் சரியாக விளையாடவில்லை.

அதேபோல், மூன்றாவது வீரராக களமிறங்கும் சுரேஷ் ரெய்னாவும் இதுவரை சிறப்பாக விளையாடவேயில்லை. அதிகபட்சமாக 36 ரன்களே அடித்துள்ளார். மொத்தம் 118 ரன்கள் எடுத்துள்ளார். ஆல் ரவுண்டர் ஜடேஜாவும் இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை.

                    

சென்னை அணியைப் பொறுத்தவரை தோனியும், கேதர் ஜாதவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மிடில் ஆர்டரில் இருவரும் அணிக்கு பக்கபலமாக இருந்து வருகிறார்கள். தோனி ராஜஸ்தான் அணிக்கு எதிராக 75 ரன்கள் அடித்து மிரட்டினார். அதேபோல், பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் சிறப்பாக விளையாடி 23 பந்தில் 37 ரன் அடித்தார். 

               

ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்ல வேண்டும் என்றால், சென்னை அணியின் பேட்டிங் பலம் மீண்டும் திரும்ப வேண்டும். தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாட வேண்டும். இன்றைய போட்டியில் டு பிளிசிஸ் அரைசதம் அடித்து நம்பிக்கை தந்துள்ளார். 

சென்னை அணி விளையாடிய போட்டிகளில் பெரும்பாலும் பேட்டிங்கிற்கு சாதகாமக் இல்லை என்பதும் இங்கு முக்கியமானது. ஆனால், அதனை காரணம் சொல்லி அம்பத்தி ராயுடு, ரெய்னா, வாட்சன் தப்பிக்க முடியாது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளை கணக்கில் கொண்டு பார்க்கும் போது சென்னை தனது பேட்டிங் பலத்தை கூட்ட வேண்டியது அவசியமாகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close