[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

சிக்ஸர் மழை பொழிந்த விராட், டிவில்லியர்ஸ் - பெங்களூர் 205 ரன் குவிப்பு

rcb-vs-kkr-ipl-2019-kohli-de-villiers-power-bangalore-to-205-3

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி, டிவில்லியர்ஸின் அதிரடியால் பெங்களூர் அணி 205 ரன்கள் குவித்துள்ளது.

12வது ஐபிஎல் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 17வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பந்துவீச தீர்மானித்தார். பெங்களூர் அணி இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளிலும் தோல்வியை தழுவியதால், முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

          

அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் பார்த்திவ் படேலும், விராட் கோலியும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தார். முதல் ஓவரிலே 3 பவுண்டரிகள் அடித்தனர். இருவரும் பவுண்டர்களாக அடித்து 5.1 ஓவரிலேயே 50 ரன்கள் கொண்டு வந்தனர். தொடர்ச்சியாக பெங்களூர் அணி சொதப்பி வந்த நிலையில், இது சிறப்பான தொடக்கமாக அமைந்தது. நிதானமாக விளையாடி வந்த பார்த்திவ் 25 ரன்னில் ஆட்டமிழந்தார். 64 ரன்னில் பெங்களூர் அணி தனது முதல் விக்கெட்டினை பறிகொடுத்தது. 

         

அதன்பிறகு விராட் கோலியுடன், டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். தொடக்கத்தில் இருவரும் நிதானமாக விளையாடினர். விராட் கோலி 31 பந்தில் அரைசதம் அடித்தார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து வானவேடிக்கை காட்டினர். சிக்ஸர்களாக பறக்கவிட்டனர். அதனால், பெங்களூர் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக விளையாடிய டிவில்லியர்ஸ் 28 பந்துகளில் அரைசதம் விளாசினார். 

        

சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 49 பந்தில் 2 சிக்ஸர் 9 பவுண்டரி உட்பட 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து, டிவில்லியர் 32 பந்தில் 4 சிக்ஸர் 5 பவுண்டரி உட்பட 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, பெங்களூர் அணி 18.5 ஓவரில் 185 ரன் எடுத்திருந்தது.

            

கடைசி நேரத்தில் ஸ்டோய்னிஸ் 13 பந்தில் 28 ரன்கள் எடுக்க பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. 16வது முறையாக 200 ரன்களை கடந்து சென்னை அணியின் சாதனையை பெங்களூர் சமன் செய்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close