[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்
  • BREAKING-NEWS வங்கக் கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி: கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS பொதுத்துறை வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS தீபாவளிக்கு மறுநாளை விடுமுறையாக அறிவித்தது தமிழக அரசு. பண்டிகையை உற்சாகமாக கொண்டாட 3 நாட்கள் தொடர் விடுமுறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்

நபி, பேர்ஸ்டோவ் கூட்டணியால் ஐதராபாத் 3 வது வெற்றி!

nabi-and-bairstow-combine-to-sink-delhi-capitals

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 16-வது லீக் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர் பிருத்வி ஷா 11 ரன்கள் எடுத்த நிலையில், புவனேஸ்வர் குமார் பந்தில் போல்ட் ஆகி ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து தவான் 12, ரிஷாப் பன்ட்  5 ரன்களில் மீண்டும் ஏமாற்றினர். 

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் நிதானமாக விளையாடினார். திவாதியா, இங்கிராம் தலா 5 ரன்கள் மட்டும் எடுத்து நடையை கட்டினர். அதனால், டெல்லி அணிக்கு மிடில் ஆர்டரும் கை கொடுக்கவில்லை. நன்றாக விளையாடி வந்த ஸ்ரேயாஸ் 43(41) ரன்னில் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தார்.

மோரிஸ் 15 பந்தில் 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி ஓவரில் அக்ஸர் படேல் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது. அக்ஸர் 13 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஐதராபாத் அணி தரப்பில் புவனேஸ்வர் குமார், முகமது நபி, கவுல் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் சாய்த்தனர். ரஷித் கான் 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார்.

எளிதான இலக்கை நோக்கி அடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி, 18.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் ஜானி பேர்ஸ்டோ 28 பந்தில் 48 ரன் எடுத்தார். விஜய் சங்கர் 16 ரன்னும் வார்னர், பாண்டே, ஹூடா தலா 10 ரன் எடுத்தனர். கடைசி கட்டத்தில் 9 பந்தில் 17 ரன் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார் நபி. யூசுப் பதான் 9 ரன்னுடனும் முகமது நபி 17 ரன்னுடனும் இறு திவரை களத்தில் இருந்தனர். 

ஐதராபாத் அணிக்கு இது 3-வது வெற்றி. டெல்லி அணிக்கு இது 3-வது தோல்வி.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close