[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம்
  • BREAKING-NEWS கொடைக்கானலில் ரூ.20 கோடியில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் அமைக்கப்படும் அரசு போக்குவரத்துக் கழகங்களில் சோதனை முறையில் பொது இயக்கப்பயண அட்டை அறிமுகப்படுத்தப்படும் - போக்குவரத்துத்துறையில் புதிய அறிவிப்புகளை பேரவையில் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வெளியிட்டார்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் 3 நாட்களுக்கு மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் - மாநிலங்களவையில் ரவிசங்கர் பிரசாத் அறிவிப்பு

“சொதப்பும் இந்திய பேட்ஸ்மேன்கள்” - கேள்வி குறியாகும் உலகக் கோப்பை ஃபார்ம் !

indian-batsmans-including-rohit-sharma-virat-kohli-poor-form-in-ipl-2019

12வது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் நாடு முழுவதும் உள்ள நகரங்களில் நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில், இந்த ஐபிஎல் தொடரை பலரும் உற்று நோக்கி வருகிறார்கள். ஏனெனில், விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா உள்ளிட்டோரின் இடங்கள் உறுதியாக உள்ளது.

இருப்பினும், மிடல் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பது இன்னும் உறுதியாகவில்லை. அதில், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், கேதர் ஜாதவ், அம்பத்தி ராயுடு உள்ளிட்டோருக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதேபோல், தோனிக்கு அடுத்து இரண்டாவது விக்கெட் கீப்பர் யார் என்பதற்கான போட்டியில் ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இடையே போட்டி நிலவுகிறது.

            

இந்நிலையில், கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி ஐபிஎல் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 15 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. இதுவரை நடைபெற்றுள்ள லீக் போட்டிகளில் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரும்பாலானோர் சொதப்பி வருகின்றனர். குறிப்பாக இந்திய அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கும் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் ஃபார்ம் இல்லாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக, ரோகித் 4 போட்டிகளில் விளையாடி வெறும் 107 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். தவான் 152 ரன்கள் எடுத்திருந்தாலும், ஒரு சிறப்பான தொடக்கத்தை பெரும்பாலும் கொடுப்பதில்லை. 

       

அதேபோல், கேப்டன் விராட் கோலி 4 போட்டிகளில் விளையாடி 78 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். ரன்கள் குவிக்க அவர் மிகவும் சிரமப்பட்டு வருகிறது. வழக்கமாக ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்களை குவிக்கக் கூடியவர் விராட். ஆனால், இந்த ஐபிஎல் தொடர் அவருக்கு முற்றிலும் வேறாக உள்ளது. மிடில் ஆடருக்கான போட்டியில் உள்ள அம்பத்தி ராயுடு 4 போட்டிகளிலும் சொதப்பியுள்ளார். அவரது இந்த பேட்டிங் சென்னை அணிக்கே பலவீனமாக உள்ளது. மொத்தமே அவர் 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

                 

விஜய் சங்கர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார். அதேபோல், மும்பை இண்டியன்ஸ் அணிக்காக ஹர்திக் பாண்ட்யா ஆல் ரவுண்டராக ஜொலிக்கிறார். இருவரும் நன்றாக சிக்ஸர் விளாசுகிறார்கள். அதனால், இவர்கள் இருவருக்கும் உலகக் கோப்பை அணியில் வாய்ப்பு உறுதி எனலாம். இதற்கு முன்பாக ஆஸ்திரேலிய தொடரிலே விஜய் சங்கர் தன்னுடைய திறமையை ஓரளவுக்கு நிரூபித்துள்ளார். 

                          

விக்கெட் கீப்பிங்கை பொறுத்த வரை தினேஷ் கார்த்திக், மூன்று போட்டிகளில் விளையாடி 53 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதில், ஒரு போட்டியில் மட்டுமே அரைசதம்(50) ரன்கள் எடுத்தார். ஆனால், மற்ற இரண்டு போட்டிகளில் சொதப்பினார். ரிஷப் பண்ட் 5 போட்டிகளில் விளையாடி 158 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு போட்டியில் மட்டுமே அவர் ஜொலித்தார். மற்ற போட்டிகளில் ரன்கள் எடுக்க திணறி வருகிறார். 

           

பந்து வீச்சை பொறுத்த வரை இந்திய அணி பும்ரா மட்டுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். புவனேஸ்வர்குமார் பந்துகளை எல்லா அணியினரும் நன்றாகவே அடித்து விளையாடுகிறார்கள். சாஹல் அதிக விக்கெட் எடுத்தாலும், குல்தீவ் ஓவரை அடித்து விளையாடுகிறார்கள். ஷமி ஓரளவு நன்றாக வீசுகிறார். உமேஷ் யாதவ் பந்துவீச்சை நன்றாக வெளுத்து வாங்கிறார்கள். 

             

ஐபிஎல் போட்டிக்கும், 50 ஓவர் போட்டிக்கும் நிறையவே வித்தியாசம் உள்ளது. இருப்பினும், முற்றிலும் ஐபிஎல் போட்டிகளை தவிர்த்து விடவும் முடியாது. ரோகித் சர்மா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே ஃபார்ம் இல்லாமல் திணறி வந்தனர். அதனால், இனிவரும் போட்டிகளில் அவர்கள் தங்களான களமாக ஐபிஎல் தொடரை பயன்படுத்திக் கொண்டு ஃபார்முக்கு திரும்ப வேண்டும். அப்படி செய்தால்தான் உலகக் கோப்பையை ஆரோக்கியமாக தொடங்க முடியும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close