[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS கருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி
  • BREAKING-NEWS தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.82 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.88 காசுகளாகவும் விலை நிர்ணயம்

டிக் டாக்-கில் இளம் பெண்ணுடன் இந்தி பாடல்: பாக். பந்துவீச்சாளருக்கு எச்சரிக்கை!

pakistan-bowler-yasir-shah-in-trouble-for-tik-tok-video-with-fan

டிக் டாக் செயலியில் இந்தி பாடலுக்கு இளம் பெண் ஒருவருடன் வாயசைத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா. இவர் 35 டெஸ்ட் போட்டிகளில் 67 இன்னிங்ஸில் விளையாடி 203 விக்கெட்டுகளையும் 24 ஒரு நாள் போட்டிகளில், 23 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 

சமீபத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில், பங்கேற்றது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடந்த இதில் ஆஸ்திரேலிய அணி அனைத்து போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்த தொடருக்கான பாகிஸ்தான் அணியில் யாசிர் ஷாவும் இடம்பெற்றிருந்தார். 

இவர், துபாயில் இளம் பெண் ஒருவருடன் டிக் டாக் செயலியில் இந்தி பாடல் ஒன்றுக்கு வாயசைக்கும் வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பாகிஸ்தான் ரசிகர்கள் அவருக்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன் வைத்தனர். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் அதிர்ச்சி அடைந்தது. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்த அந்த கிரிக்கெட் வாரியம், இனி இதுபோன்ற செயல்களில் இருந்து ஒதுங்கி இருக்க வேண்டும் என்று அவருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் யாசிர் ஷா சார்பில் இதுபற்றி விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், துபாய், மால் ஒன்றில், டிக் டாக் செயலியை சேர்ந்த ஊழியர்கள், பாடலுக்கு வாயசைக்கும்படி ஷாவிடம் கேட்டுக்கொண்டனர். முதலில் மறுப்புத் தெரிவித்த ஷாவை, அவர்கள் வற்புறுத்தியதால் சம்மதம் தெரிவித்தார். இதுதான் நடந்தது’ என்று கூறப்பட்டுள்ளது. 

இதே போல துபாயில் நடந்த பிரபல அமெரிக்க பாடகர் அகோனின் இசை நிகழ்ச்சியில் கல்நது கொண்ட மற்றொரு பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் அது தொடர்பான வீடியோவை சமூகவலைத்தளத்தில் பதிந்துள்ளார். அதுவும் வைரலாகியுள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close