[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

’ஆல் ரவுண்ட்’ பாண்ட்யா அதிரடி: சிஎஸ்கே-வுக்கு முதல் தோல்வி

hardik-s-all-round-effort-ends-super-kings-unbeaten-run

மும்பை அணியுடன் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 37 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

ஐபிஎல் தொடரில், நேற்று நடந்த 15வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய மும்பை அணியில், தொடக்க ஆட்டக்காரரான டி காக் 4 (7) ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து ஜடேஜா வீசிய பந்தில் ரோகித் சர்மா 13 (18) ரன் எடுத்திருந்தபோது தோனியிடம் கேட்ச் ஆனார்.

பிறகு வந்த சூர்யகுமார் யாதவ் நிலைத்து விளையாடினார். இதற்கிடையே வந்த யுவராஜ் சிங் வந்த வேகத்தில் 4 (6) மட்டுமே எடுத்து நடையை கட்டினார். பின்னர் வந்த குணால் பாண்ட்யா, சூர்யகுமாருடன் சேர்ந்து மும்பை அணியை சரிவில் இருந்து மீட்டார். மும்பையின் ஸ்கோர் 112 ரன்கள் இருந்தபோது குணால் பாண்ட்யா 42 (32) ரன்களில் வெளியேறினார். அரை சதம் அடித்த சூர்யகுமார் 59 (43) ரன்களில் அவுட் ஆனார்.

பின்னர் வந்த ஹர்திக் பாண்ட்யா மற்றும் பொல்லார்ட் சில சிக்சர்கள் அடித்து மும்பை ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 170 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 8  பந்தில் 25 ரன்னுடனும், பொல்லார்ட் 7 பந்தில் 17 ரன்னுடன் இறுதி வரை ஆட்டமிழக்கவில்லை.

17.6 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 125 ரன் என்ற நிலையில் இருந்த மும்பை அணி, 150 ரன்னை தாண்டுமா என்ற நிலையில் இருந்தது. ஆனால், பிராவோ வீசிய கடைசி ஓவரில் மட்டும் அந்த அணிக்கு 29 ரன் கிடைத்தது. 

அடுத்து களமிறங்கிய சென்னை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. வாட்சன் 5 ரன்னுடனும் ராயுடு ரன் ஏதும் எடுக்கமாலும் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 16 ரன்னில் நடையை கட்ட, 4.6 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 33 ரன் என்ற நிலையில் தடுமாறிக்கொண்டிருந்தது சென்னை அணி. பிறகு வந்த தோனியும் கேதர் ஜாதவும் அணியை மீட்க முயன்றனர். 

வழக்கம் போல கடைசி கட்ட ஓவர்களில் விளாசலாம் என நினைத்த தோனியின் ஐடியா இந்த முறை ஒர்க் அவுட் ஆகவில்லை. அவர் விளாச நினைத்தபோது, பாண்ட்யா பந்தில் சூர்யகுமாரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்தவர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. இதனால் 20 ஓவர் முடிவில் சென்னை அணியால் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகப்பட்சமாக கேதர் ஜாதவ் 58 ரன் எடுத்தார். மும்பை தரப்பில் மலிங்கா, ஹர்திக் பாண்ட்யா தலா 3 விக்கெட்டும் பேரண்டோர்ஃப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

8 பந்தில் 25 ரன் மற்றும் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்ட்யா, ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணிக்கு இது முதல் தோல்வி ஆகும்

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close