[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி டிச. 19ஆம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார்
  • BREAKING-NEWS ஏலம் மூலமாக உள்ளாட்சிப் பதவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால் அந்தப் பதவி செல்லாது - அமைச்சர் கடம்பூர் ராஜூ
  • BREAKING-NEWS டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பேருந்துகளுக்கு தீ வைப்பு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்
  • BREAKING-NEWS லண்டனில் நடைபெற்ற மிஸ் வேர்ல்டு அழகிப் போட்டியில் மகுடம் சூடினார் ஜமைக்கா பெண். இந்திய அழகி சுமா ராவ் மூன்றாம் இடம் பிடித்தார்
  • BREAKING-NEWS கோவை அருகே தேக்கம்பட்டியில் தொடங்கியது கோயில் யானைகளின் வருடாந்திர நலவாழ்வு முகாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் 28 யானைகள் உற்சாக கொண்டாட்டம்
  • BREAKING-NEWS அசாமை தொடர்ந்து மேற்கு வங்காளத்திலும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

நான் கேப்டனாக தொடர்வது குறித்து பிசிசிஐ தான் முடிவு எடுக்க வேண்டும்: தோனி

continue-as-captain-about-bcci-s-decision-dhoni

அறிமுக வீரர்களுடன் விளையாடுவது வித்தியாசமான அனுபவம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி கருத்து தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய தோனி, இந்திய அணியில் பல புதுமுக வீரர்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறினார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியாவின் கிரிக்கெட் கலாச்சாரத்தை நன்கு அறிந்தவராக பயிற்சியாளர் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக தாம் தொடர்வது குறித்து பிசிசிஐ தான் முடிவு எடுக்க வேண்டும் என மற்றொரு கேள்விக்கு பதிலளித்தார்.

இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகள் இடையிலான முதல் போட்டி வரும் 11ஆம் தேதி ஹராரேவில் நடைபெறவுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close