[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

தொடர் வெற்றியை பதிவு செய்யுமா சென்னை சூப்பர் கிங்ஸ்?

chennai-super-kings-vs-mumbai-indians

மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் வெற்றி முனைப்பில் இன்று களமிறங்குகிறது. 

மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளன. இரு அணிகளும் தலா மூன்று முறை கோப்பையை வென்றுள்ளன. ஐபிஎல் 2019ல் இதுவரை தோற்கடிக்கப்படாத அணியாக சென்னை அணி உள்ளது. ஆனால் மும்பை அணி இரண்டு அணிகளிடம் தோற்று ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. சென்னை அணி ஆர்சிபி, டெல்லி, ராஜஸ்தான் அணிகளை வென்றுள்ளது. மும்பை அணியோ டெல்லி மற்றும் பஞ்சாப்பிடம் தோற்று ஆர்சிபியுடன் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

இந்நிலையில், இரு அணிகளும் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மோதுகிறது. இந்த போட்டி பெரும்பாலும் மும்பைக்கு சாதகமாகவே உள்ளது. கடைசியாக ஆடிய 5 மும்பை - சென்னை போட்டிகளில் 4 போட்டிகளை மும்பையே வென்றுள்ளது. 

எனினும் ராஜஸ்தானுக்கு எதிராக விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் ஆட்டம் அபாரமாக இருந்தது.  46 பந்தில் 75 ரன்கள் குவித்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். தோனி பேட்டிங் செய்ய வரும் போது சிஎஸ்கே 3 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் எடுத்திருந்தது.

ரெய்னாவுடன் இணைந்து தோனி 61 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அடுத்து ப்ராவோவுடன் இணைந்து 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இதனால் தோனியின் சிறப்பான ஆட்டத்தை இந்த போட்டியிலும் எதிர்பார்க்கலாம் ரசிகர்கள் கருதுகின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close