[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஜூன் 28 முதல் ஜூலை 30ம் தேதி வரை நடத்த முடிவு
  • BREAKING-NEWS நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும்- மாநிலங்களவையில் திருச்சி சிவா கோரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு தரவேண்டிய நிலுவைத்தொகை ரூ.13,000 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும்- மாநிலங்களவையில் அதிமுகவின் மைத்ரேயன் பேச்சு
  • BREAKING-NEWS 'பேச்சுரிமை என்றாலும் அதற்கு வரம்பில்லையா ?' - இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி
  • BREAKING-NEWS தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் மாலை 5 மணியுடன் நிறைவுபெற்றது
  • BREAKING-NEWS ஜூன் 28ல் கிராம சபைக் கூட்டங்களில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் கலந்துகொள்ள வேண்டும்; கிராம சபைக்கூட்டம் முழுமையாக நடைபெற மக்கள் நீதி மய்யம் எப்போதும் திறம்பட செயல்பட வேண்டும் - கட்சியினருக்கு கமல்ஹாசன் வேண்டுகோள்

ஐபிஎல்: முதல் வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் ! தொடர் தோல்வியில் பெங்களூர்

rajasthan-royals-first-win-as-rcb-s-losing-streak-continues

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இடையேயான டி20 போட்டி ஜெய்பூரில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. இதனால் முதல் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் பார்திவ் படேல் சிறந்த பேட்டிங்கை வெளிபடுத்தினர். ஆனால் 23 (25) ரன்கள் எடுத்த நிலையில் கோலி விக்கெட்டை இழந்தார்.

அதன்பின்னர் வந்த பெங்களூர் பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். பார்திவ் படேல் மற்றும் ஸ்டொயினிஸ் ஆகியோர் நிலைத்து ஆடினர். அரைசதம் அடித்த பார்திவ் படேல் 67 (41) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் வந்த மொய்தின் 18 (9) ரன்கள் சேர்க்க, இறுதிவரை ஆட்டமிழக்காத ஸ்டொயினிஸ் 31 (28) எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. ராஜஸ்தான் அணியில் ஸ்ரேயாஸ் கோபால் 3 விக்கெட்டுகளையும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. அணியின் கேப்டன் ரஹானே 22 ரன்களிலும், ஸ்டீவ் ஸ்மித் 38 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெங்களூரு அணியின் வீரர் சாஹல் இரண்டு விக்கெட்டுகளையும், மொஹமத் சிராஜ் ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். 

‌இந்த போட்டியில் இவ்விரு அணிகளின் கீப்பர்களும் அதிகமான ரன்களை எடுத்து தங்களின் அணிகளுக்கு பலத்தை சேர்த்தனர். மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ராஜஸ்தான் அணி வீரர் ஸ்ரேயஸ் கோபால் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றி தான் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close