[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

சிக்ஸர் வானவேடிக்கை காட்டிய ரஸல் - கொல்கத்தா 185 ரன் குவிப்பு

dcvkkr-dinesh-karthik-and-andre-russell-strong-as-kkr-reach-118-5-in-15-overs-vs-delhi-capitals-in-delhi

ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 185 ரன்கள் எடுத்துள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 61 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. நாயக் 7, உத்தப்பா 11 ரன்னில்கள் ஏமாற்றினர். சிறிது நேரம் தாக்குப்பிடித்த லின் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். எதிர்பார்க்கப்பட்ட ரானா 1 ரன்னில் நடையைக் கட்டினார். சுப்மன் கில் 4 ரன்னில் அவுட் ஆனார். கொல்கத்தா அணி 7.3 ஓவரில்தான் 50 ரன்களை எட்டியது. 

       

சரிவில் இருந்த அணியை கேப்டன் தினேஷ் கார்த்திக், ரஸல் ஜோடி மீட்டது. ஒரு கட்டத்தில் 120 ரன்களை தாண்டாமா என்ற நிலையில் இருந்த அணியை, 13.5 ஓவரில் 100 ரன்களை எட்ட வைத்தனர். ரஸல் சிக்ஸர் மழை பொழிந்தார். தினேஷ் கார்த்திக்கும் தன் பங்கிற்கு பவுண்டரிகளாக விளாசினார்.

ரஸல் 23 பந்தில் அரைசதம் அடித்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அவர், 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மொத்தம் 6 சிக்ஸர், 4 பவுண்டரி அவர் விளாசினார். அதேபோல், 36 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து தினேஷ் கார்த்திக்கும் ஆட்டமிழந்தார். அவர் 2 சிக்ஸர், 5 பவுண்டரி எடுத்தார்.

         

இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது. 61 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருந்த அணி, ரஸல், தினேஷ் அதிரடியால் 185 ரன்களை எட்டியுள்ளது. குறிப்பாக, முதல் 10 ஓவர்களில் 64 ரன்கள் அடித்திருந்த அந்த அணி, அடுத்த 10 ஓவர்களில் 121 ரன்கள் விளாசியது.

        

இந்த ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் விளையாடி ரஸல் 159 ரன்கள் குவித்துள்ளார். முதல் இரண்டு போட்டிகளில் முறையே 49*, 48 ரன்கள் எடுத்திருந்தார். அதேபோல், இந்தத் தொடரில் தற்போது வரை அதிக ரன் குவித்து ஆரஞ்சு தொப்பியையும் வசப்படுத்தினார். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close