[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னை மாநகரத்தின் அரசியல் மற்றும் கலாசார வரலாற்றை பற்றி பல புத்தகங்களை எழுதிய புகழ்பெற்ற எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான எஸ்.முத்தையா காலமானார்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி பற்றி 5 பகுதிகளை கொண்ட Modi-Journey of a Common Man என்ற வெப் சீரிஸ் தொடரை நிறுத்த ஈராஸ் நவ் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS 4 தொகுதி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை மே 1ம் தேதி ஒட்டப்பிடாரத்தில்(தனி) தொடங்குகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ராகுல் காந்திக்கு ஆதரவாக கேரள மாநிலம் வயநாட்டின் மானந்தவாடி பகுதியில் இன்று பிரியங்கா காந்தி வதேரா வாக்கு சேகரிப்பு
  • BREAKING-NEWS பொன்னமராவதி சம்பவத்தால் அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவு
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக

’’இது ஐபிஎல், கிளப் கிரிக்கெட் இல்ல” : நடுவர் தவறுக்கு கடுப்பான விராத் கோலி!

we-are-playing-at-ipl-level-not-club-cricket-virat-kohli

’நாம் ஐபிஎல் தொடரில் விளையாடுகிறோம். கிளப் கிரிக்கெட் இல்லை’ என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராத் கோலி கோபமாகக் கூறினார்.

ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டி, பெங்களூரு சின்னசாமி ஸ்டேடி யத்தில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த மும்பை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது. ரோகித் சர்மா 48 (33), சூர்யகுமார் யாதவ் 38 (24), யுவராஜ் சிங் 23 (12) ரன்கள் எடுத்து அவுட் ஆகினர். யுவராஜ் சிங் ஹாட்ரிக் சிக்சர் அடித்தபோது, அரங்கம் அதிர்ந்தது. பின்னர், வந்த ஹர்திக் பாண்ட்யா 14 பந்துகளில் அதிரடியாக 32 ரன்கள் சேர்த்தார். பெங்களூரு அணியில் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை சாய்த்தார், சாஹல்.

இதையடுத்து, 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. விராத் கோலி 46 ரன் எடுத்தார். டிவில்லியர்ஸ், 41 பந்தில் 70 ரன் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

கடைசி இரண்டு ஓவர்களில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பும்ரா மற்றும் மலிங்கா சிறப்பாக பந்துவீசி மும்பை அணியை வெற்றி பெறச் செய்தனர். 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.


இந்தப் போட்டியில் கடைசி பந்தில் பெங்களூரு அணி வெற்றி பெற 7 ரன் தேவைப்பட்டது. அந்த பந்தை மலிங்கா, நோ பாலாக வீசினார். இதை நடுவர் ரவி கவனிக்கவில்லை. பின்னர் டி.வி ரீப்ளேவில் நோ-பால் என தெளிவாக தெரிந்தது. நடுவர், நோ-பால் கொடுத்திருந்தால் பெங்களூரு  வெற்றி பெற்றிருக்கலாம். இது சர்ச்சையானது.

பின்னர் பேசிய பெங்களூரு கேப்டன் விராத் கோலி, ‘’இது போன்ற தவறுகள் தவிர்க்கப்பட வேண்டும். நாம் ஐபிஎல் தொடரில் விளையாடுகி றோம். கிளப் கிரிக்கெட்டில் இல்லை. நடுவர்கள் தங்கள் கண்களை விழிப்பாக வைத்திருக்க வேண்டும். அது நோ-பால் என அறிவிக்கப் பட்டிருந் தால் போட்டி வேறு விதமாக மாறியிருக்கும். ஒரு சில ரன்களில் போட்டியின் வெற்றி வாய்ப்பு இருக்கும்போது, இப்படி நடந்தால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அதனால் நடுவர்கள் இன்னும் கவனம் இருக்க வேண்டும்’’ என்று கோபமாகக் கூறினார்.

வெற்றி பெற்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறும்போது, ‘’இது மாதிரியான தவறுகள் போட்டிக்கு நல்லதல்ல. பும்ரா வீசிய ஒரு பந்து வைடாக போகவே இல்லை. ஆனால், வைட் என்று அறிவித்தார்கள். இது தவிர்க்கப்பட வேண்டும். இந்தப் போட்டியில் எங்கள் பந்துவீச்சாளர் கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி தேடி தந்தார்கள். இந்த மைதானத்தில் 200 ரன்னுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும்’’ என்றார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close