[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

“கெயிலை வீழ்த்த திட்டம் வைத்துள்ளோம்” - லக்கி ஃபெர்குசன்

we-can-look-at-some-sutuations-for-attacking-gayle-lockie-ferguson

கிறிஸ் கெயிலை சமயம் பார்த்து வீழ்த்த திட்டம் வைத்துள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பவுலர் லக்கி ஃபெர்குசன் தெரிவித்துள்ளார்.

இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்த இரண்டு அணிகளின் கேப்டன்களுமே தமிழகத்தை சேர்ந்தவர்கள் தான். பஞ்சாப் அணிக்கு அஸ்வினும், கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக்கும் தலையேற்றுள்ளனர். கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இரண்டு அணிகளும் ஏற்கனவே தலா ஒரு போட்டிகளில் வென்றுள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி, புள்ளிகள் பட்டியலில் தற்காலிகமாக முதல் அல்லது 2வது இடத்தை பிடிக்கும். தற்போது சென்னை முதலிடத்தில் 4 புள்ளிகளுடன் உள்ளது.

இன்றைய போட்டி குறித்து பேசிய கொல்கத்தா அணி பவுலர் லக்கி ஃபெர்குசன், “கிறிஸ் கெயில் நல்ல பேட்டிங் ஃபார்மில் உள்ளார். கடந்த போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் விளையாடுவதை பார்க்க நன்றாக இருந்தது. அவரை வீழ்த்துவதற்கு நாங்கள் சில தருணங்களை திட்டமிட்டுள்ளோம். ஆனால் பொதுவாக பஞ்சாப் அணியின் பேட்டிங் வரிசை மிக வலிமையாக உள்ளது. அதனால், ஒரு எளிமையான பேட்டிங் கொண்ட அணிக்கு எதிராக நாங்கள் விளையாடவில்லை என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது” என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close