[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கை குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 140 ஆக உயர்வு
  • BREAKING-NEWS மதுரையில் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ள அறைக்குள் நுழைந்த பெண் வட்டாட்சியர் சம்பூர்ணம் சஸ்பெண்ட்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு; பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையத்துக்கு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ பரிந்துரை
  • BREAKING-NEWS திருச்சி அருகே கோயில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

தோனியை ஊக்கப்படுத்தி குரலெழுப்பிய தோனியின் மகள் ஸிவா! க்யூட் வீடியோ!

ziva-dhoni-cheering-his-father-skipper-dhoni-during-ipl-match-with-dc

ஐபிஎல் போட்டியின் போது தோனியை ஊக்கப்படுத்திய அவரது மகள் ஸிவாவின் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்களைக் குவித்தது. பின்னர் 148 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்ட களமிறங்கிய சென்னை அணி சீரான ரன்குவிப்பில் ஈடுபட்டது. 

தொடக்க வீரர் அம்பதி ராயுடு 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் மற்றொரு தொடக்க வீரரான ஷேன் வாட்சன் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 44 ரன்களை விளாசினார். சுரேஷ் ரெய்னா 30 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து ஜோடி சேர்ந்த கேதார் ஜாதவ் மற்றும் கேப்டன் தோனி நிதானமான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். இறுதியில் 19.4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

சென்னையின் முதல் ஆட்டத்தில் கேப்டன் தோனி பேட்டிங் செய்யவில்லை. நேற்றைய போட்டியின் மூலம் இந்தாண்டு ஐபிஎல் போட்டிக்கான தனது பேட்டிங்கை தோனி தொடங்கினார். மைதானத்தில் பேட்டுடன் களம் இறங்கிய தோனியை ரசிகர்கள் ஆரவாரம் செய்து  வரவேற்றனர். தோனியை ரசிகர்கள் பலரும் குரலெழுப்பி ஊக்கப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் மறுபக்கம் தோனியின் மகளான ஸிவாவும் தனது அப்பாவை ஊக்கப்படுத்தினார்.

கூட்டத்தோடு கூட்டமாக ''அப்பா... அப்பா...'' என்று ஹிந்தியில் கூறி தனது ஆரவாரத்தை வெளிப்படுத்தினார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close