[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் 144 தடை உத்தரவு - இருதரப்பினர் மோதலை தொடர்ந்து இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவு
  • BREAKING-NEWS 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் ஏப்ரல் 21ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விருப்பமனு பெறலாம் - அதிமுக
  • BREAKING-NEWS விஜய் நடிப்பில் உருவாகிவரும் தளபதி63 படத்திற்கு எதிராக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு - விஜய் நடிக்கும் 63வது படத்தின் கதை தன்னுடையது என குறும்பட இயக்குநர் செல்வா என்பவர் வழக்கு
  • BREAKING-NEWS அமமுக கடைசிவரை குழுவாக மட்டுமே இருக்க முடியும்; கட்சியாக மாற வாய்ப்பில்லை - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எப்போது நடந்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 71.87% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் 75.57% வாக்குகள் பதிவாகியுள்ளன - தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

'கை குலுக்க வந்த அஸ்வின் கண்டுகொள்ளாத பட்லர்' !

buttler-run-out-controversy-buttler-refuse-handshake-to-aswin

இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #MankadAshwin என்ற ஹாஷ்டாக் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையேயான போட்டி ஜெய்பூரில் நேற்று நடைபெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 14 ரன்களில் வெற்றி பெற்றது. ஜோஸ் பட்லர் 43 பந்துகளில் 69 ரன்கள் அதில் 2 சிக்ஸர்கள் 10 பவுண்டரிகள் என ரன் மழையை பொழிந்துக் கொண்டிருந்தார்.

இந்தக் கட்டத்தில்தான் ஒரு முக்கியமான திருப்புமுனை ஏற்பட்டது. ஆட்டத்தின் 13 ஆவது ஓவரை அஸ்வின் வீசினார், ஜோஸ் பட்லர் ரன்னர் திசையில் நின்றுக் கொண்டிருந்தார். அஸ்வின் 13 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தை வீசும் போது, பட்லர் க்ரீஸை விட்டு வெளியே நகர்ந்தார். அப்போது அஸ்வின் "மன்கட்" முறையில் ரன் அவுட் செய்தார். அதாவது ஒரு பவுலர் பந்தை வீசுவதற்கு முன்பாகவே ரன்னர் க்ரீஸை விட்டு வெளியே வந்தால் ரன் அவுட் செய்யலாம் என்ற விதி கிரிக்கெட்டில் இருக்கிறது. இப்போது அஸ்வின் செய்த இந்த ரன் அவுட்டால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு இருக்கிறது. அஸ்வின் செய்தது தவறு, அவர் கிரிக்கெட்டை அசிங்கப்படுத்திவிட்டார் என்ற ரீதியில் கடும் விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

இது குறித்து அஸ்வினும் செய்தியாளர்கள் கேள்விக்கு பதலளித்துள்ளார் " மன்கட் முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக பெரிதாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை என நினைக்கிறேன். கிரிக்கெட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் இயல்பாக நடக்க கூடியவை. நானும் முழுதாக ஓடி வந்து கிரீஸை தொட்டு பந்து வீச வந்தேன், அப்போது பட்லரும் கிரீஸை விட்டு நர்ந்துவிட்டார், அவர் என்னை பார்க்கவுமில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மன்கட் முறையில் அவரை ரன் அவுட் செய்தேன். நான் செய்த இந்த அவுட்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இதுபோன்ற அவுட்டுகள் முழுமையாக ஒரு போட்டியின் முடிவை தீர்மானிக்கும்" என்றார்.

பல்வேறு கிரிக்கெட் வீரர்களும் அஸ்வினின் மன்கட் ரன் அவுட்டை கடுமையாக விமர்சித்து கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். முக்கியமாக ஆஸி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அஸ்வினை கடுமையாகி சாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று போட்டி முடிந்த பின்பு இரு அணி வீரர்களும் ஒருவொருக்குவர் கை குலுக்குவார்கள். அப்போது பட்லர், அஸ்வினிடம் கை குலுக்காமல் சென்றுவிட்டார். இதனை அதிர்ச்சியாக பார்த்த அஸ்வின், ராஜஸ்தான் பயிற்சியாளரிடம் ஏதோ பேசினார், இந்த சம்பbத்தின் விடீயோவும் போட்டோவும் இப்போது வைரலாகி வருகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close