[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

“பேட்ட பராக்” - சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மாஸ் காட்டிய ரஜினி

ipl-2019-film-star-rajini-enjoys-csk-match-in-chepauk

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியை காண ரஜினி காந்த் வந்ததால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். 

12ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில், டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து விளையாடிய ஆர்சிபி அணியின் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் துவக்கம் முதலே திணறினார்கள். ஆடுகளத்தில் பந்துகள் சரியாக பேட்டிங் செய்ய ஏதுவாக எழும்பவில்லை. இதனால் தொடக்கம் முதலே ஆர்சிபி அணி திணறியது. ஆடுகளத்தின் தன்மையைறிந்த தோனி இரண்டாவது ஓவரை ஹர்பஜன் சிங்கிற்கு அளித்தார். 

இது ஆட்டத்தில் நல்ல திருப்பமாக அமைந்தது. ஹர்பஜன் சிங்கின் சுழலில் கோலி 6 ரன்களுடனும், ஏபிடிவில்லியர்ஸ் மற்றும் மோயின் அலி 9 ரன்களுடனும் பெவிலியன் திரும்பினர். அத்துடன் சிமரான் ஹெர்ட்மேயரும் வந்தவேகத்தில் ரன் எதுவும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் சரியாக சொபிக்கவில்லை. இதனால் ஆர்சிபி அணி 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

இந்நிலையில் இந்த ஆட்டத்தை நேரில் காண ரஜினி காந்த் மைதானத்திற்கு வந்தார். அவர் மைதானத்தில் வந்து அமருவதை ரசிகர் ஒருவர் வீடியோ எடுத்து ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். இதனை சிஎஸ்கே அணியின் ட்விட்டர் பக்கம் ரிட்விட் செய்தது. அதில், “பேட்ட பராக் மற்றும் தலைவர் இன் த டேன்” என்று பதிவிட்டுள்ளது. இப்போட்டியை ரஜினிகாந்த் மைதானத்தில் ரசிகர்களுடன் 20 நிமிடங்கள் அமர்ந்து நேரில் கண்டு ரசித்துள்ளார். ஸ்டேடியத்திற்கு வந்த ரஜினியுடன் பலரும் செல்பி எடுத்துக் கொண்டனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close