[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார் ப.சிதம்பரம். காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் நடவடிக்கை
  • BREAKING-NEWS அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க மோடி அரசு முயற்சிக்கிறது - ராகுல் காந்தி

அசத்திய சிஎஸ்கே சீனியர் வீரர்கள் - 70 ரன்னில் சுருண்ட பெங்களூரு

ipl-2019-live-score-csk-vs-rcb-at-chennai-super-kings-need-71-runs-to-win-first-encounter

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார். 

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரூ அணியில் விராட் கோலி மற்றும் பார்த்தீவ் பட்டேல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சென்னையில் அணியில் இரண்டாவது ஓவரையே ஹர்பஜன் சிங் வீசினார். அசத்தலாக பந்துவீசிய அவர் அடுத்தடுத்து விக்கெட்களை அள்ளினார். கேப்டன் விராட் கோலி 6, ஏபி டிவில்லியர்ஸ் 9, மொயின் அலி 9 என முதல் 3 விக்கெட்களை அடுத்தடுத்து சாய்த்தார். 

          

அதேபோல், ரன்களை குறைவாக கொடுத்தார். அவரை தொடர்ந்து ஜடேஜாவும் தன் பங்கிற்கு கிராண்ஹோமை ஆட்டமிழக்க செய்தார். மற்றொரு சுழற்பந்துவீச்சாளரான இம்ரான் தாஹிரும் அசத்தலாக பந்துவீசி மூன்று விக்கெட்களை சாய்த்தார். பெங்களூர் அணி 59 ரன்னிற்குள் 9 விக்கெட்களை இழந்துவிட்டது. அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். 

            

விக்கெட் கீப்பர் பார்த்திவ் பட்டேல் கடைசிவரை போட்டினார். இருப்பினும், 18வது ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழந்தார். அவர் 35 பந்தில் 29 ரன்கள் எடுத்தார். அந்த ஓவரை பிராவோ வீசினார். அவர் ஒரு பந்து மட்டுமே வீசி ஒரு விக்கெட் எடுத்தார். பெங்களூரு அணி 17.1 ஓவரில் 70 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

              

ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி அடித்த இரண்டாவது குறைவான ஸ்கோர் ஆகும். ஐபிஎல் வரலாற்றில் குறைவான ரன் அடித்த அணி என்ற மோசமான பெருமை அந்த அணி வசமே உள்ளது. 2017ம் ஆண்டில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் அந்த அணி அடித்த 49 ரன்கள்தான் ஐபிஎல் போட்டிகளில் குறைவான ஸ்கோர் ஆகும். அதேபோல், 2014ம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 70 ரன்களில் ஆட்டமிழந்தது. தற்போது மீண்டும் ஒருமுறை 70 ரன்களில் சுருண்டுள்ளது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close